பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..

கண்ணீருடன் நடிகை ரைசா வைரலாகும் பதிவு இதோ - Bigg boss raiza crying photos viral | Galatta

இந்திய தொலைகாட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியில் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியில் தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2017 ல் பிக் பாஸ் என்ற பெயரிலே ஒளிப்பரப்பானது. இதில் நடிகர்கள் ஹரிஷ் கல்யான், காயத்ரி, சுஜா, நமீதா, ஆர்த்தி. ஓவியா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர். இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் ரைசா வில்சன். பிரபல மாடலாக பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருப்பார். பிக் பாஸ் போட்டியில் 60 நாள் மட்டுமே இருந்த ரைசா ரசிகர்களின் மனதை கவர்ந்து அதிகம் பேசபட்டார்.

அதன் பின் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதன்பின் ‘தனுஷு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘FIR’ போன்ற படங்களில் நடித்த இவர் ஹீரோயினாக முதல் படமே மிகப்பெரிய ஹிட். அதன் பின் தொடர்ந்து சினிமாவில் நல்ல நிலையில் வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இடையே சில காரணத்தினால் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை. தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கி அதன்படி கருன்காப்பியம், லவ், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூக வலை தளங்களில் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்து வைரலாகவும் வலம் வந்தார். சமீபத்தில் நீச்சல் உடையில் பதிவிட்ட புகைப்படம் டிரெண்ட் ஆனது குறிபிடத்தக்கது.  

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுத படி கண்ணீருடன் புகைப்படங்களை பதிவிட்டு அதனுடன், “இங்கு யாரும் தனியாக இல்லை.. நாம் அனைவரும் அதை படிப்படியாக கண்டறிந்து வருகிறோம்.” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது கண்ணீர் நிறைந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் தங்கள் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பதிவில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் “நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்.. அன்பையும் வலிமையையும் உங்களுக்கு தருகிறோம்..” என்று தெரிவித்துள்ளனர். அவரை தொடர்ந்து நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள்.  “இதுவும் கடந்து போகும் ... வலிமையாக இருங்கள்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

A post shared by Raiza (@raizawilson)

 ‘லால் சலாம்’ படப்பிடிப்பிலிருந்து மொய்தீன் பாய்.. மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. -  ரசிகர்களால் வைரலாகும் புகைப்படம் இதோ..
சினிமா

‘லால் சலாம்’ படப்பிடிப்பிலிருந்து மொய்தீன் பாய்.. மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படம் இதோ..

‘பொன்னியின் செல்வன் 2’  - வை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி..  – இணையத்தில் வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

‘பொன்னியின் செல்வன் 2’ - வை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி.. – இணையத்தில் வைரலாகும் அப்டேட் இதோ..

காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!
சினிமா

காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!