"கத்தி பேசனும் இல்லன்ன கத்தில பேசனும் " படத்தில் இயக்குனர் போட்ட கண்டிஷன்... – நடிகர் ஆர்யா பகிர்ந்த தகவல் .. முழு வீடியோ இதோ..

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் குறித்து நடிகர் ஆர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் -  Arya about kathar basha endra muthuramalingam | Galatta

கிராமத்து கதைகளத்தில் நேர்த்தியான கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் முத்தையா. முதல் படம் ‘குட்டி புலி’ திரைப்படம் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’ திரைப்படம் வரை முத்தையா படங்களில் கமர்ஷியல் காட்சிகளுக்கும் உணர்வு பூர்வமாக காட்சிகளுக்கும் அட்டகாசமான சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்லும். அந்த வகையில் அவரது முந்தைய திரைப்படமான விருமன் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா நடிகர் ஆர்யா வுடன் கூட்டணி அமைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.  

ஆர்யாவின் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் முனனதாக வெளியாகி ரசிக்ர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படத்தில் ஆர்யாவுடன் சீத்தி இத்தானி, கே பாக்யராஜ், பிரபு, சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர்  R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர்  ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் 2 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் குறித்து அப்படத்தின் நாயகன் ஆர்யா பேசுகையில்,

“முத்தையா சார் நகரத்து கதை  பண்ணனும் அடம்பிடிச்சு வந்தாரு..  நகரத்து கதை நான் எங்க வேணும்னா தேடி பிடிச்சுப்பேன். எனக்கு கிராமத்து ஆக்ஷன் படம் பண்ணனும் னு ஆசை படுறேன் சார்.. னு கேட்டு வாங்குனேன்.. எனக்கு கிராமத்து களம் கதை நடித்து அனுபவம் இல்லை.. நான் முத்தையா சாரை நம்பி போயிருக்கேன். அதுல எனக்கு நம்பிக்கை இருந்தது. அவருடைய படங்களில் உணர்வு பூர்வமான கதாபாத்திரத்திரங்கள் இருக்கும். அதே போல் தான் இந்த படத்திலும் இருந்தது. என்றார் நடிகர் ஆர்யா.

மேலும் தொடர்ந்து, “டப்பிங்கில்முத்தையா சார் ஒன்னு சொல்வார். என் ஹீரோ இந்த படத்துல ஒண்ணு கத்தி பேசனும் இல்லன்ன கத்தியில பேசனும் இரண்டே இரண்டு தீர்வு தான்.. அந்தளவுக்கு ரொமான்ஸ் சீன்ல கூட கத்தி பேச வெச்சாரு..  அந்தளவு அழகா இருந்தது அவரோட வேலை பார்த்தது. அவரோட டப்பிங் ஸ்டைலா இருக்கட்டும், எல்லாமே புதுமையா இருந்தது.  படப்பிடிப்பிலும் ஒரு குடும்பம் மாதிரி இருந்தது.  இந்த மாதிரி ஒரு எல்லா விஷயமும் கலந்திருக்க படம் நான் இதுக்கு முன்னாடி பண்ணதில்லை.. இந்த படத்தில என்னோட பங்களிப்பு வித்யாசமா இருக்கும். ரொம்ப பிடிச்சுது எனக்கு..” என்றார் ஆர்யா.

மேலும் நடிகர் ஆர்யா மற்றும் படக்குழுவினர்  காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..

Fan boy சம்பவத்திற்கு ரெடியா? உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ...
சினிமா

Fan boy சம்பவத்திற்கு ரெடியா? உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ...

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் தடை செய்ய கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. – விவரம் உள்ளே..
சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் தடை செய்ய கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. – விவரம் உள்ளே..