பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு விவரம் உள்ளே -Vijay antony kolai movie release date out now | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து தற்போது பல ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன், திமிரு பிடிச்சவன் போன்ற வெற்றி படங்களின் வரிசையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 தற்போது இடம் பெற்றுள்ளது. இசையமைப்பாளராக, நடிகராகவும், பட தொகுப்பாளராகவும் வலம் வந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த மே 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம், ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விஜய் ஆண்டனி நடிப்பில் நீண்ட நாள் ரிலீஸுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் ‘கொலை’.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தினை இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கி யுள்ளார். கிரைம் திரில்லர் கதைகளத்தை கொண்டுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய  கிரிஷ் கோபாலகிருஷ்ணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நீண்ட காலம் ரிலீஸுக்கு காத்திருந்த கொலை திரைப்படம் சில காரணங்களினால் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொலை படக்குழுவினர் படத்தினை முடித்து வெளியிட முன் வந்துள்ளனர். அதன்படி விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வரும் ஜூலை 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனியின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படமான பிச்சைக் காரன் 2படத்திற்கு வெளியாகும் படம் என்பதால் கொலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

After the Blockbuster #Pichaikkaran2, @vijayantony 's next #Kolai releases on 21st July 2023. @DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @Dhananjayang @pradeepfab @Panbohra @siddshankar_ @thinkmusicindia @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/mvOPZ7Ihdu

— Infiniti Film Ventures (@FvInfiniti) June 28, 2023

 

 

“எனக்கு பட வாய்ப்புகளே வரலையா?” வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த துஷாரா விஜயன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive interview இதோ..
சினிமா

“எனக்கு பட வாய்ப்புகளே வரலையா?” வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த துஷாரா விஜயன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive interview இதோ..

மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!  31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! 31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..

ரிலீஸுக்கு தயாரான சிவகார்த்திகேயனின் மாவீரன்.. அட்டகாசமான அப்டேட்டுடன் படக்குழு வெளியிட்ட வீடியோ..
சினிமா

ரிலீஸுக்கு தயாரான சிவகார்த்திகேயனின் மாவீரன்.. அட்டகாசமான அப்டேட்டுடன் படக்குழு வெளியிட்ட வீடியோ..