தளபதி விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் தமன்... வாரிசுOST ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட் இதோ!

தளபதி விஜயின் வாரிசுOST ரிலீஸ் அப்டேட் கொடுத்த தமன்,thalapathy vijay in varisu movie ost release plan shared by thaman | Galatta

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாரிசு திரைப்படத்தின் ஓ எஸ் டிராக் களை வெளியிடும் திட்டம் குறித்து இசையமைப்பாளர் தமன் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் இந்தி சினிமாவில் பல கோடி ரசிகர்களின் அபிமான ஹீரோவாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். இதுவரை தனது திரைப் பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் தனது 67-வது திரைப்படமாக தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.  அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வரும் விவேக், வாரிசு திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் கூடுதல் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தளபதி விஜயின் ரசிகர் ஒருவர் வாரிசு திரைப்படத்தின் OST ரிலீஸ் குறித்து கேட்டபோது, வாரிசு திரைப்படத்தின் OST ட்ராக்குகளை இந்த ஜூலைக்குள் வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இசையமைப்பாளர் தமனின் இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமனின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
 

Before this #July I will do it Nanba #VarisuOST 🫶 https://t.co/kaVCj3nNZe

— thaman S (@MusicThaman) June 27, 2023

பிரபாஸின் ஆதிபுருஷ் பட புது சர்ப்ரைஸ்... ராவணனின் அட்டகாசமான சிவோஹம் வீடியோ பாடல் இதோ!
சினிமா

பிரபாஸின் ஆதிபுருஷ் பட புது சர்ப்ரைஸ்... ராவணனின் அட்டகாசமான சிவோஹம் வீடியோ பாடல் இதோ!

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் தளபதி விஜயின் லியோ... தென்னிந்திய படங்களிலேயே இதுவரை இல்லாத பெரிய ஓப்பனிங்! அதிரடி அப்டேட்
சினிமா

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் தளபதி விஜயின் லியோ... தென்னிந்திய படங்களிலேயே இதுவரை இல்லாத பெரிய ஓப்பனிங்! அதிரடி அப்டேட்

'நெல்சன் சாரோட விஷயமும்… ஆக்ஷனும் இருக்கும்'- ரஜினிகாந்தின் ஜெயிலர் பட சுவாரஸ்யங்கள் பகிர்ந்த ஸ்டண் சிவாவின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'நெல்சன் சாரோட விஷயமும்… ஆக்ஷனும் இருக்கும்'- ரஜினிகாந்தின் ஜெயிலர் பட சுவாரஸ்யங்கள் பகிர்ந்த ஸ்டண் சிவாவின் சிறப்பு பேட்டி இதோ!