தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ

ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் பட ஸ்பெஷல் அப்டேட்,ravi teja in tiger nageshwara rao first look by 5 superstars | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு தற்போது வெளியானது. முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த வாத்தி மற்றும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜீவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. 

அந்த வகையில் முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் கேஜிஎஃப் கதைக்களத்தில் மிரட்டலான படமாக உருவாகி வரும் தங்கலான், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணியில் அதிரடி பீரியட் ஆக்ஷன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர், இயக்குனர் ராஜு முருகன் - கார்த்தி கூட்டணியில் ஜப்பான், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21, இயக்குனர் வசந்தபாலனின் அநீதி, இந்திரா காந்தி அம்மையாரின் பயோபிக் படமாக நடிகை கங்கணா ரனாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி, சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படம் என எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஜீவி பிரகாஷ் குமார் தற்போது இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திற்கும் ஜீவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக தெலுங்கில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படத்திற்கும் தற்போது ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். ஆந்திராவின் ஸ்டூரத்புரம் பகுதியில் 1970களில் மிகப் பிரபலமான மற்றும் பயங்கரமான கொள்ளைக்காரனாக வலம் வந்த நாகேஸ்வர ராவ்-ன் பயோபிக் படமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ண நாயுடு இயக்குகிறார். மாஸ் மகாராஜா என மக்களால் கொண்டாடப்படும் ரவி தேஜா உடன் இணைந்து காயத்ரி பரத்வாஜ், நிப்பூர் சனான் உள்ளிட்ட பலர் நடிக்கும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, நடிகர் ரவிதேஜாவின் திரை பயணத்தில் முதல் PAN INDIA திரைப்படமாக பிரம்மாண்டமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற மே 24ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நட்சத்திர நடிகர்கள் யார் என யோசியுங்கள் என ரசிகர்களின் ஆர்வத்தை துண்டும் அதிரடியான அறிவிப்பு அறிவிப்பு இதோ…
 

5 SUPERSTARS from 5 LANGUAGES are coming together to introduce #TigerNageswaraRao to the world ❤️‍🔥

First look on May 24th 💥💥#TNRFirstLookOnMay24@RaviTeja_offl @DirVamsee @AbhishekOfficl @AnupamPKher #RenuDesai @NupurSanon @gaya3bh @Jisshusengupta @gvprakash @madhie1pic.twitter.com/eIrCm55n5E

— G.V.Prakash Kumar (@gvprakash) May 16, 2023

மிர்ச்சி சிவா - யோகி பாபுவின் காமெடி சரவெடி... சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் காசேதான் கடவுளடா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சினிமா

மிர்ச்சி சிவா - யோகி பாபுவின் காமெடி சரவெடி... சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் காசேதான் கடவுளடா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

"90ஸ் கிட்ஸ் ஃபேவரட் பம்பரம் விட்டு VIBE செய்த ஹிப் ஹாப் தமிழா!"- வீரன் பட ஷூட்டிங் நினைவுகள்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!

விஜய் சேதுபதி - 'விடாமுயற்சி' இயக்குனர் மகிழ் திருமணி - மோகன் ராஜா இணைந்த அதிரடி படம்... கவனம் ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விஜய் சேதுபதி - 'விடாமுயற்சி' இயக்குனர் மகிழ் திருமணி - மோகன் ராஜா இணைந்த அதிரடி படம்... கவனம் ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!