"3வது படத்திற்கு ரசிகர்கள் காத்திருக்க மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ் தொடங்கியது எப்படி?"- தியாகராஜன் குமாரராஜாவின் பதில் இதோ

மாடர்ன் லவ் சென்னை தொடங்கியது பற்றி தியாகராஜன் குமாரராஜாவின் பதில்,Thiyagarajan kumararaja about how he started modern love chennai | Galatta

இயக்கியது இரண்டு திரைப்படங்கள் என்றாலும் ஆகச்சிறந்த இயக்குனர் என திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் தனி கவனம் பெறுபவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. தனது முதல் படமான ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதை பெற்ற தியாகராஜன் குமாரராஜா அடுத்த இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் பெரும் பாராட்டுகளை பெற்றது. 2010ல் தனது முதல் படமான ஆரண்ய காண்டம் படத்தை கொடுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா 2019 ல் தான் சூப்பர் டீலக்ஸ் எனும் தனது இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து இவர் இயக்கும் மூன்றாவது படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் வந்த அறிவிப்பு தான் மாடர்ன் லவ் சென்னை.

ஆம் தனது அடுத்த படைப்பாக தியாகராஜன் குமாரராஜா கையில் எடுத்தது மாடர்ன் லவ் சென்னை எனும் அந்தாலாஜி வெப் சீரிஸ். முன்னதாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகிய ஆந்தாலாஜி வெப் சீரிஸ்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாடர்ன் லவ் சென்னை வெளிவர இருக்கிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த புத்தம் புது காலை மற்றும் புத்தம் புது காலை விடியாதா ஆகிய ஆந்தாலஜி வெப் சீரிஸ்களின் வரிசையில்,சென்னையை மையப்படுத்திய அழகான 6 காதல் கதைகளை கொண்ட இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸின் 6 எபிசோடுகளை, இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குக்கூ, ஜோக்கர் மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்குனர் அக்ஷய் சுந்தர் ஆகிய 6 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

TYLER DURDUN AND KINO FIST தயாரிப்பில் அசோக் செல்வன், ரித்து வர்மா, ரம்யா நம்பீசன், கிஷோர், விஜயலட்சுமி, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், வசுந்திரா, டிஜே பானு, வாசுதேவன் முரளி, ஸ்ரீ கௌரி பிரியா, வமிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜி வெப் சீரிஸ்க்கு இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். வருகிற மே 18ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. 

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் உடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட தியாகராஜன் குமாரராஜா தன்னுடைய அடுத்த 3வது படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த சமயத்தில் மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸை கையில் எடுத்தது எப்படி என்பதை பற்றி பேசினார். அப்படி பேசுகையில், “இது தற்செயலாக தான் தொடங்கியது. வேறு யாரோ செய்ய வேண்டியது, தயாரிப்பு மற்றும் வேறு ஏதோ காரணங்களுக்காக அது நடக்கவில்லை. சரி யார் தயாரிப்பை கையில் எடுப்பது யார் ஷோ ரன்னராக இருப்பது எனக் கேட்ட போது, பொதுவாக சொன்னேன் நானே செய்கிறேன் என சொல்லி இருந்தேன். அப்படியாக தான் ஆரம்பித்தது. TDKF உடைய பணியாகத்தான் இது இருக்கும் நான் நுழைய வேண்டாம் என நினைத்திருந்தேன். அப்புறம் ஷோ ரன்னர் ஆனேன். அதே மாதிரி கடைசியில் ஒரு இயக்குனருக்கு மாற்றாக இயக்குனராகவும் இருக்க வேண்டியதாக ஆகிவிட்டது.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தியாகராஜன் குமாரராஜாவின் அந்த முழு சிறப்பு பேட்டி இதோ…
 

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்! சுவாரஸ்யமான புதிய தகவல் இதோ
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்! சுவாரஸ்யமான புதிய தகவல் இதோ

மிர்ச்சி சிவா - யோகி பாபுவின் காமெடி சரவெடி... சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் காசேதான் கடவுளடா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சினிமா

மிர்ச்சி சிவா - யோகி பாபுவின் காமெடி சரவெடி... சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் காசேதான் கடவுளடா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

"90ஸ் கிட்ஸ் ஃபேவரட் பம்பரம் விட்டு VIBE செய்த ஹிப் ஹாப் தமிழா!"- வீரன் பட ஷூட்டிங் நினைவுகள்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!