'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!

தனது 50வது தமிழ் படமாக சப்தம் படத்தில் இணைந்த சிம்ரன்,actress simran joined in sabdham movie as her 50th movie | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகியாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் திகழும் நடிகை சிம்ரன் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஐபி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து தளபதி விஜய் உடன் ஒன்ஸ் மோர் படத்தில் இணைந்த சிம்ரன் தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் அவள் வருவாளா திரைப்படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்த சிம்ரன் அடுத்தடுத்து நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ருக்கு என்கிற ருக்மணி கதாபாத்திரத்தில் மக்களின் மனம் கவர்ந்த நடிகை சிம்ரன் தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார்.

ஜோடி, டைம், உன்னை கொடு என்னை தருவேன், பார்த்தேன் ரசித்தேன், பிரியமானவளே, 12B, பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், தமிழ், பஞ்சதந்திரம், கோவில்பட்டி வீரலட்சுமி, நியூ என தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த நடிகை சிம்ரன் சிறு இடைவெளிக்கு பிறகு வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சீமராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்களில் நடித்த நடிகை சிம்ரன் கடந்த (2022) ஆண்டில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான், மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி, ஆர்யா நடிப்பில் வெளிவந்த கேப்டன் ஆகிய திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்தார். 

அடுத்ததாக பிரசாந்த் நடிப்பில் அந்தாத்துன் படத்தின் ரீமேக்காக வெளிவர இருக்கும் அந்தகன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன் அடுத்ததாக தனது 50 ஆவது தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஈரம் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் அறிவழகன் - ஆதி - இசையமைப்பாளர் தமன் கூட்டணி தற்போது மீண்டும் புதிய ஹாரர் திரில்லர் படமாக தயாராகும் சப்தம் படத்தில் இணைந்துள்ளது. 7G பிலிம்ஸ் மற்றும் ஆல்பா ஃப்ரேம்ஸ் இணைந்து வழங்கும் சப்தம் திரைப்படத்தில் ஆதியுடன் இணைந்து நடிகை லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, டாக்டர் & பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபுஜோசப் படத்தொகுப்பு செய்யும் சப்தம் திரைப்படத்திற்கு கவிஞர் விவேகா பாடல்களை எழுதுகிறார். மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் சப்தம் திரைப்படத்தின் மூணார் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் தனது 50வது தமிழ் படமாக சப்தம் படத்தில் சிம்ரன் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

Welcoming Ever Green @SimranbaggaOffc onboard for #Sabdham

Starring @AadhiOfficial
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical

Produced by @7GFilmsSiva & @Aalpha_frames#LakshmiMenon @Lailalaughs @KingsleyReddin @Dop_arunbathu @EditorSabu @teamaimpr @decoffl @reddotdzign1 pic.twitter.com/cocyfLQx7x

— Arivazhagan (@dirarivazhagan) March 16, 2023

சீயான் விக்ரமின் அதிரடியான துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?- வேற லெவல் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்!
சினிமா

சீயான் விக்ரமின் அதிரடியான துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?- வேற லெவல் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட மாஸான பாடல்... இதுவரை வெளிவராத சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! வீடியோ உள்ளே
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட மாஸான பாடல்... இதுவரை வெளிவராத சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! வீடியோ உள்ளே

சினிமா

"யார் அந்த பிகிலி?"- ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!