ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ப்ரதீப் ரங்கநாதன் 90'S கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக ரிலீஸான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 

கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் லவ் டுடே.முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தனது 22 வது திரைப்படமாக தயாரிக்கும் லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து சத்யராஜ் ராதிகா யோகி பாபு இவானா ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

லவ் டுடே படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் லவ் டுடே படத்திற்கு பிரதீப்.E. ராகம் படத்தொகுப்பு செய்கிறார்.சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது கலக்கலான என்டர்டெய்னிங் படமாக உருவாகிவரும் லவ் டுடே திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லவ் டுடே திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

View this post on Instagram

A post shared by Nikil Murukan (@onlynikil)