தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள கார்கி திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.சாய்பல்லவி உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள கார்கி திரைப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது. தமிழக ரிலீஸ் உரிமத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது
  
இந்நிலையில் கார்கி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றது இந்த சந்திப்பில் மேடையில் பேசிய நடிகையும் கார்கி திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா லெக்ஷ்மி எமோஷனலாகி கண்கலங்கினார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

“கார்கி ஒரு 3வருட பயணம்...எனக்கு தெரியும் கட்டாயம் நான் அழப் போகிறேன்” என ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேச பேசவே கண்கலங்கினார். உடனே அங்கு வந்த சாய்பல்லவி அவருக்கு ஆறுதல் கூற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் “இது ஆனந்தக் கண்ணீர் தான்” என்றார். தொடர்ந்து பேசிய சாய்பல்லவி, “ஐஸ்வர்யா லெக்ஷ்மி கடந்த 3 ஆண்டுகளாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து உறுதுணையாக இருந்திருக்கிறார் அதனால் தான் எமோஷனலாகிவிட்டார்.” என கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன், “கார்கி திரைப்படத்தின் தயாரிப்பின் சமயத்தில் பலவிதமான கிராமங்களில் நாங்கள் சந்தித்து வந்தோம் அந்த சமயத்தில் எனக்கு உறுதுணையாக சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் முதலில் எனக்காக நின்றவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் இல்லை என்றால் இந்த படம் இருந்திருக்காது இவ்வளவு தைரியமாக இந்த படத்தை ஆரம்பித்து முடித்திருக்க மாட்டேன்... இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அப்போதுதான் மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார்கள் அந்த மொத்த சேமிப்பையும் இந்த படத்தை கட்டாயமாக செய்ய வேண்டும் இது சொல்ல வேண்டிய கதை என மொத்தத்தையும் கொடுத்தார். என்ன சொல்வதென்று தெரியவில்லை ரொம்ப நன்றி” கூறினார்.

இதன் பிறகு மீண்டும் பேசிய நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சாய்பல்லவியின் கார்கி படவிழாவில் கண்கலங்கி பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அந்த வீடியோ இதோ…
 

மேடையில் கண்கலங்கிய #AishwaryaLekshmi 🥺, ஆறுதல் சொன்ன #SaiPallavi ❤️| #Gargi Press meet@Sai_Pallavi92 pic.twitter.com/mWfCE8dNsQ

— Galatta Media (@galattadotcom) July 7, 2022