'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் வெளியாகவுள்ள விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் - Long waited Vijay antony movie release date announced | Galatta

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் வெற்றி படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி முடித்துள்ளார். தற்போது திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ம் தேதி உலகெங்கிலும் வெளியாவதற்கான அனைத்து வேலைகளிலும் மும்முரமாக இறங்கி உள்ளார். இதே நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் 2  படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது அவர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்.

ரசிகர்களின் ஆதரவை பெற்று பிளாக் பஸ்டர் அடித்த பிசைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ஒரு புறம் இருக்க இந்நிலையில் விஜய் ஆண்டனி முன்னதாக நடித்து முடித்த ‘தமிழரசன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கதாநாயாகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் மற்றும் இவர்களுடன் சுரேஷ் கோபி, சோனு சூட், யோகி பாபு, ராதா ரவி, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், கஸ்தூரி, சங்கீதா மற்றும் மதுமிதா நடித்துள்ளார்.  SNS தாயரிப்பு நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் இருமுகன், எனிமீ, தம்பி, நெற்றிக்கண் அகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் RD ராஜசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியது பின் சில காரணங்களால் திரைப்படம் தொடர்ந்து வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு நீண்ட நாள் கழித்து வரும் மார்ச் 31 ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த அறிவிப்பினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

actor attakathi dinesh mass getup for pa ranjith thandakaaranyam goes viral40 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 'நான்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின் நிறைய வெற்றி படங்களை கொடுத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் ஆண்டனி 'அக்னி சிறகுகள்', 'காக்கி', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இசை, நடிப்பு, தயாரிப்பு மட்டுமல்லாமல் படத்தொகுப்பும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் லேடி விஜய் சேதுபதி?.. 'மக்கள் செல்வி' பட்டம் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

நான் லேடி விஜய் சேதுபதி?.. 'மக்கள் செல்வி' பட்டம் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

“நாங்க சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டோம்” தளபதி விஜய் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் .. வைரல் வீடியோ இதோ..
சினிமா

“நாங்க சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டோம்” தளபதி விஜய் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் .. வைரல் வீடியோ இதோ..

தெய்வீகம் பொங்கும் ராகதேவனின் குரல்.. வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்.. – அட்டகாசமான லிரிக் வீடியோ இதோ!
சினிமா

தெய்வீகம் பொங்கும் ராகதேவனின் குரல்.. வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்.. – அட்டகாசமான லிரிக் வீடியோ இதோ!