விறுவிறுப்பான கட்டத்தில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்… ட்ரெண்டாகும் சஞ்சய் தத்தின் அதிரடியான புது GLIMPSE இதோ!

தளபதி விஜயின் லியோ பட காஷ்மீர் ஷூட்டிங்கிற்கு புறப்பட்ட சஞ்சய் தத்,sanjay dutt joins the sets of thalapathy vijay in leo shoot at kashmir | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என்ற கனவோடு இருக்கும் பல வளரும் இயக்குனர்களுக்கு முன் உதாரணமாக திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தனது இரண்டாவது படமாக இயக்கிய கைதி திரைப்படத்தில் முக்கிய இயக்குனராக முத்திரை பதித்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் ஆல் டைம் ரெகார்டாக வசூல் சாதனை படைத்தது. 

இதனை அடுத்து இந்திய அளவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிககு பிறகு மீண்டும் இணைந்துள்ள தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். முன்னதாக கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில், அடுத்த கட்டமாக தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்றனர். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லியோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் லியோ திரைப்படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அந்த வகையில் லியோ திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் படப்பிடிப்பிற்காக தற்போது காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் மும்பையில் இருந்து காஷ்மீர் புறப்பட்ட விமான நிலைய வீடியோ தற்போது வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Sanjay Dutt spotted at Mumbai Airport 🧨 - En route to Join the sets of #Leo at Kashmir ✈️#LeoFilm #BloodySweet
pic.twitter.com/YRsvliLtMW

— Harish N S (@Harish_NS149) March 9, 2023

மகளிர் தினத்தையொட்டி அனுஷ்கா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் Surprise Glimpse.. ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

மகளிர் தினத்தையொட்டி அனுஷ்கா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் Surprise Glimpse.. ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..
சினிமா

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..