“நாங்க சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டோம்” தளபதி விஜய் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் .. வைரல் வீடியோ இதோ..

சர்கார் படபிடிப்பில் தளபதி விஜய் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் - Varalakshmi sarathkumar about thalapathy Vijay | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார் இவரது மகள் வரலக்ஷ்மி சரத்குமார் 2012 ல் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் தொடர்ந்து பல முக்கிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவாறாக வலம் வந்தார். கதாநாயாகியாக மட்டுமல்லாமல் கதைக்கு ஏற்ற  கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கச்சிதமாக தனது பங்கினை கொடுப்பவர். அதன்படி அவர் நடிப்பில் வெளியான ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா, ‘சத்யா, ‘சண்டைக்கோழி 2, ‘சர்கார்,மற்றும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றிருப்பர். மேலும் வரலக்ஷ்மி சரத்குமார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி துறைகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கொன்றால் பாவம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது அவர் ‘பிறந்தாள் பராசக்தி’ , ‘பாம்பன் ஆகிய  படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நமது கலாட்டா ஏற்பாடு செய்திருந்த ரசிகர் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தனது ரசிகர்களை சந்தித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் சர்கார் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லியாக நடிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர், "எனக்கு ஆக்ஷன் னு அந்த வார்த்தை கேட்டதும் எதிர்ல யார் இருக்காங்க னு பார்க்க மாட்டேன்.. ஆனால் ஒரு காட்சியில் நாற்காலியை தள்ளி கொண்டு விஜய் சார் வந்து பேசனும் அந்த காட்சியில்முதல் டேக்கில் அந்த நாற்காலி நகர்ந்து எங்கேயோ போயிடுச்சு.. அப்போ இரண்டு பேரும் சிரிச்சோம். ஒவ்வொரு நேரம் நாற்காலி நகர்த்தும் போதும் அது எங்கெங்கோ போகும்.‌ அப்பொல்லாம் சிரிச்சிட்டு தான் இருந்தோம். ஒரு கட்டத்தில் முருகதாஸ் சார் எந்திரிச்சு.. 'இந்த சீன் இன்னிக்கு முடிக்கலாமா வேண்டாம்? இல்லை இரண்டு பேர் சிரிச்சிட்டே இருக்க போறீங்களா?" னு கேட்டார். அந்த சீன் பண்ணும் போது ரொம்ப கஷ்டப்பட்டோம். சார் அங்க பேசிட்டு இருப்பார். எதிர்ல நான் சிரிச்சிட்டு இருப்பேன்.  நாங்க இரண்டு பேரும் சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டோம். அதனாலே அப்பப்போ சிரிச்சோம். ஆனா படத்துல அது ரொம்ப சீரிஸான சீன் .” என்றார்.

மேலும், கிளாமர் காட்சிகளில் எப்படி கையாளுவீர்கள்? என்ற கேள்விக்கு,

"என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் நான் பண்ணுவேன். என்னுடைய முதல் படத்திலிருந்தே பாருங்கள். நான் அதை தான் செய்திருப்பேன். அது கிளாமர் னு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி எண்ணம் இருக்கு.‌ என்ன பொறுத்த வரை நான் நடிப்பதும் என்னுடைய வெளி தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துவேன்.” என்றார் வரலக்ஷ்மி சரத்குமார்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட கலகலப்பான வீடியோ இதோ.. 

இதல்லவா Line up.. அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் வெற்றிமாறன் திரைப்படங்களின் பட்டியல் - சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

இதல்லவா Line up.. அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் வெற்றிமாறன் திரைப்படங்களின் பட்டியல் - சிறப்பு கட்டுரை இதோ..

நாளை வெளியாகவிருக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் சிறப்பு காட்சி - அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

நாளை வெளியாகவிருக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் சிறப்பு காட்சி - அட்டகாசமான வீடியோ இதோ..

இந்தியன் 2 படத்தின் சண்டைக்காட்சிகளை செதுக்கி வரும் இயக்குனர் ஷங்கர்.. - வைரலாகும் கமல் ஹாசன் Glimpse.. விவரம் இதோ..
சினிமா

இந்தியன் 2 படத்தின் சண்டைக்காட்சிகளை செதுக்கி வரும் இயக்குனர் ஷங்கர்.. - வைரலாகும் கமல் ஹாசன் Glimpse.. விவரம் இதோ..