வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் ‘சூரரைப் போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

படப்பிடிப்பில் வெற்றிமாறனை சந்தித்த சுதா கொங்கரா - Director Sudha Kongara meets vetri maaran | Galatta

கடந்த 2010 ம் ஆண்டில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்த்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுதா கொங்கரா நீண்ட இடைவெளிக்கு பின் ‘இறுதிச்சுற்று’ படத்தை கொடுத்து மிகபெரிய பாராட்டுகளை பெற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். பின் நடிகர் சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’  படத்தை இயக்கினார். இந்திய அளவு அதிகம் பேசப்பட்ட படமாக அமைந்தது. தேசிய விருதுகளையும் அப்படம் குவித்தது என்பது குறிப்பிடதக்கது. அதன்மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் சுதாகொங்கரா. தற்போது இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் வைத்து சூர்யா – ஜோதிகா வின் 2D நிறுவனம் தயாரிப்பில் எடுத்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலை மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டது. அதன் படி அவரது கை எலும்பு முறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். ஓய்வின்  காரணமாக தற்காலிகமா சூரரைப் போற்று படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதா கொங்கரா வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் விடுதலை படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து அதனுடன்

என் இருண்ட இடைவெளியில் இருந்து.. #விடுதலை படப்பிடிப்பில் என் நண்பன் சொன்னது “நிச்சயமாக படப்பிடிப்பின் கடைசி நாள்"  என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வெற்றிமாறன் – சுதா கொங்கரா சந்திப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Out of my gloomy break #viduthalai ✊🏾
On what my buddy says is his “definite last day” of shoot! 😎 #VetriMaaran pic.twitter.com/ZpSWhdyMQ3

— Sudha Kongara (@Sudha_Kongara) March 10, 2023

 

இயக்குனர் வெற்றிமாறனும் சுதா கொங்கராவும் நடிகர் சூர்யாவுடன் தங்களது அடுத்த படத்தை தொடங்கவுள்ளனர். இதில் வெற்றிமாறன் சூர்யா கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்திற்கு வாடிவாசல் என்று பெயரிடப்பட்டுள்ளது. சுதா – சூர்யா கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தும் அவர் சூர்யாவை வைத்து ஒரு படத்தையும் சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்திலும் பணியாற்றியுள்ளார். இதனை ஒப்பீடு செய்து ரசிகர்கள் இந்த சந்திப்பின் புகைபடத்தை பகிர்ந்து வருகின்றனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவான விடுதலை படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்கும் இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் பாடல்கள், முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 அன்று உலகெங்கிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வீகம் பொங்கும் ராகதேவனின் குரல்.. வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்.. – அட்டகாசமான லிரிக் வீடியோ இதோ!
சினிமா

தெய்வீகம் பொங்கும் ராகதேவனின் குரல்.. வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்.. – அட்டகாசமான லிரிக் வீடியோ இதோ!

ICU வில் சிறுத்தை சிவா தம்பி.. என்ன நடந்தது?.. விளக்கமளித்த பாலாவின் மனைவி.. விவரம் இதோ..
சினிமா

ICU வில் சிறுத்தை சிவா தம்பி.. என்ன நடந்தது?.. விளக்கமளித்த பாலாவின் மனைவி.. விவரம் இதோ..

இதல்லவா Line up.. அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் வெற்றிமாறன் திரைப்படங்களின் பட்டியல் - சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

இதல்லவா Line up.. அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் வெற்றிமாறன் திரைப்படங்களின் பட்டியல் - சிறப்பு கட்டுரை இதோ..