‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..

தண்டகாரண்யம் படத்திற்காக அட்டகத்தி தினேஷின் புதிய லுக் வைரல் – Attakathi new look goes viral | Galatta

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் வழக்கமான போக்கை மாற்றிய கருத்துகளை சரியான முறையில் விதைக்க பா ரஞ்சித் ஒவ்வொரு படங்களிலும் முயற்சித்து வழங்கி வருகிறார். இயக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறார்.  அதன்படி அவரது நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் ‘பரியேரும் பெருமாள், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,’ரைட்டர், ‘செத்துமான், ‘பொம்மை நாயகி ஆகிய படங்களை தயாரித்து வழங்கியுள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியாக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் ‘ஜே.பேபி’ என்ற படம் உருவாகி வருகிறது. இதனிடையே மீண்டும் அட்டகத்தி தினேஷ் உடன் பா ரஞ்சித் கை கோர்த்துள்ள திரைப்படம் ‘தண்டகாரண்யம்

இப்படத்தை பா ரஞ்சித் தயாரிப்பில் முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இயக்குனர் அதிரன் ஆதிரை இயக்குகிறார். அதன்படி பா ரஞ்சித், அட்டகத்தி தினேஷ், இயக்குனர் அதிரன் ஆதிரைகூட்டணி அமையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பா ரஞ்சித் அதிதி ஆனந்த், S.சாய் தேவானந்த் மற்றும் S.சாய் வெங்கடேஸ்வரன் ரூபேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள தண்டகாரண்யம் படத்தில் கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யபடத்தொகுப்பு செய்கிறார் செல்வா.RK மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 மும்முரமாக உருவாகி வரும் தண்டகாரண்யம் படப்பிடிப்பு தளத்திலிருந்து இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் பிரபல நடிகரும் குக் வித் கோமாளி போட்டியாளருமான முத்துகுமார் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அட்டகத்தி தினேஷ் வயதான தோற்றத்திலும் நடிகர் கலையரசன் இராணுவ வீரர் தோற்றத்திலும் உள்ளார். புகைப்படத்துடன் முத்துகுமார் படப்பிடிப்பின் முதல் பிரிவி நிறைவடைந்துள்ளது என்று தெரியப் படுத்தியுள்ளார். இதனையடுத்து தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முதல் பார்வை வெளியீட்டில் இருந்தே இப்படம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

A post shared by Muthu Kumar (@actormuthukumar)

நான் லேடி விஜய் சேதுபதி?.. 'மக்கள் செல்வி' பட்டம் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

நான் லேடி விஜய் சேதுபதி?.. 'மக்கள் செல்வி' பட்டம் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

“நாங்க சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டோம்” தளபதி விஜய் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் .. வைரல் வீடியோ இதோ..
சினிமா

“நாங்க சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டோம்” தளபதி விஜய் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் .. வைரல் வீடியோ இதோ..

தெய்வீகம் பொங்கும் ராகதேவனின் குரல்.. வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்.. – அட்டகாசமான லிரிக் வீடியோ இதோ!
சினிமா

தெய்வீகம் பொங்கும் ராகதேவனின் குரல்.. வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்.. – அட்டகாசமான லிரிக் வீடியோ இதோ!