'மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை!'- முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிக்கை இதோ!

மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை,mamta banarji govt banned the kerala story movie in west bengal | Galatta

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இந்தியாவின் பல தரப்பிலும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், முதல் மாநிலமாக மேற்கு வங்காளத்தில் இத்திரைப்படத்திற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மாநிலத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கும் என்ற பயத்தில் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டி இத்திரைப்படத்திற்கு தங்களது மாநிலத்தில் வரி விலக்கு அளிப்பதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகை அதா ஷர்மா கதையின் நாயகியாக நடித்திருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்திலேயே மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின. தொடர்ந்து படம் ரிலீஸான பின் இன்னும் பெரிய எதிர்ப்புகள் வெடித்தன. கேரள மாநிலத்தில் இந்து குடும்பத்தில் பிறந்த ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற பெண் பிறகு பாத்திமா என இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றப்படுகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை அதா ஷர்மா நடித்துள்ளார். இந்து மதத்தை சார்ந்த ஒரு செவிலியர் சூழ்ச்சியால் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகிறார். அதன்பிறகு ஆப்கானிஸ்தானில் சிறையில் அடைக்கப்படுகிறார். தொடர்ந்து இதுபோல கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டும் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டும் இருப்பது போல தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனும் படக்குழுவினரை கடுமையாக சாடினார். மேலும் திரைப்படத்தை கேரளா அரசாங்கம் எதிர்ப்பதாகவும் அறிவித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான எதிர்ப்புகள் அதிகரிக்க தொடங்கின. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை விதிக்க கோரி வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த காரணத்தினால் கடந்த மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இருப்பினும் மறுபுறம் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற காரணத்தினால் கடந்த மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது மேற்கு வங்காளத்தில் அதிரடி நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், "இது ஒரு திரிக்கப்பட்ட கதை" என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் மீதான இந்த தடையை நீக்க கோரி தி கேரளா ஸ்டோரி படக் குழுவினர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
 

வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு போல் பேசி கஸ்டடி பட விழாவை அதிர வைத்த வெங்கட் பிரபு... சோசியல் மீடியாவில் ட்ரண்டாகும் கலக்கல் வீடியோ இதோ!
சினிமா

வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு போல் பேசி கஸ்டடி பட விழாவை அதிர வைத்த வெங்கட் பிரபு... சோசியல் மீடியாவில் ட்ரண்டாகும் கலக்கல் வீடியோ இதோ!

சினிமா

"நடிகர்கள் மீது பெரிய மரியாதை வந்திருக்கிறது!"- கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்பெஷல் வீடியோ!

சினிமா

"அப்போ NO சொல்லி ESCAPE ஆயிட்டேன்!"- கருமேகங்கள் கலைகின்றன படத்தில் தங்கர் பச்சானுடன் இணைந்தது எப்படி? GVMன் பதில் இதோ