நான் என்னை DIRECT பண்ணும்போது சில PROBLEMS தெரிஞ்சுது!- பிச்சைக்காரன் 2 பட அனுபவத்தை முதல் முறை பகிர்ந்த விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் 2 பட அனுபவத்தை முதல் முறை பகிர்ந்த விஜய் ஆண்டனி,vijay antony about his first directorial pichaikkaran 2 movie experience | Galatta

முதல்முறையாக விஜய் ஆண்டனி இயக்கிய நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற போது படகில் ஏற்பட்ட மோசமான விபத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்தார். மிகப்பெரிய விபத்தில் இருந்து பூரண குணமடைந்து தற்போது மீண்டு வந்துள்ள விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விஜய் ஆண்டனி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி தான் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் நீங்கள் இயக்குனராக மற்றவர்களை இயக்கும் போது, இந்த ரியாக்ஷன் கொடுங்கள் இதை குறைத்துக் கொள்ளுங்கள் என நீங்கள் சொல்வீர்கள்.. ஆனால் நீங்களே ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நீங்களே அதை இயக்கும்போது அதை எப்படி கையாளுகிறீர்கள்? என கேட்ட போது,

“முதல் 10 படங்களை நான் தான் தயாரித்தேன். அதனால் எனக்கு எவ்வளவு வருமோ? அதை மட்டும் ஒரு லிமிட்டாக வைத்து ஒன்று செட் பண்ணி வைத்திருக்கிறேன். இப்போது வரக்கூடிய இயக்குனர்கள் என்னிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்ப்பதில்லை. இவர் இவ்வளவுதான் என தயார் செய்து வருவதனால், இப்படி செய்யுங்கள் சார் என கேட்கிற மாதிரி இல்லை. ஏனென்றால் என்னுடைய லிமிட் அவர்களுக்கு தெரியும். நான் மற்றவர்களை இயக்குவது மிகவும் ஈசியாக இருந்தது. மற்ற நடிகர்களை வைத்து இயக்குகிறேன் என்றால் என்னால் ஈசியாக செய்துவிட முடியும். நான் ஃப்ரேமில் பார்க்கிறேன் அல்லவா? அதனால் கொஞ்சம் தலையை குனிங்க, கொஞ்சம் ரைட்ல திரும்புங்க, கொஞ்சம் லெஃப்ட்ல திரும்புங்க, போதும், சிரிக்காதீங்க என என்னால் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண முடியும். நான் என்னை வைத்து இயக்கும் போது சில பிரச்சனைகள் எனக்கு தெரிந்தது. நான் ஃப்ரேமில் என்ன செய்கிறேன் என்ன செய்தால் எப்படி ரியாக்ட் ஆகிறது. நான் ஒரு வெரஸ்டைல் நடிகர் கிடையாது. கொஞ்சம் ஷட்லாக ஏதோ சமாளிக்கிறேன். நான் எப்படி செய்கிறேன் என்பதை ஒவ்வொரு ஷாட்டும் முடிந்த பிறகு தான் போய் பார்க்க வேண்டும். சில நேரங்களில் இயக்குனர்கள் ஓகே என சொல்லி விடுவார்கள் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது… ஆனால் நான் இயக்கும்போது நான் நடித்து முடித்துவிட்டு போய் பார்த்தால் தான் ஓகே சொல்ல முடியும். நான் நடிகனாக இருப்பதால் இயக்குனரின் முடிவை இங்கிருந்து எடுக்க முடியாது. அங்கே போய் பார்த்து தான் சொல்ல முடியும் ஏனென்றால் நான் மட்டும் இல்லை அல்லவா? ஃப்ரேமில் இன்னொருவரும் இருக்கிறார் எனவே அதெல்லாம் பார்த்து தான் செய்ய வேண்டும். அதனால் இது கொஞ்சம் இரட்டை வேலை போல தான் இருக்கிறது. ஆனால் மற்ற விஷயங்களை படமாக்கும் போது கொஞ்சம் ஈசியாக இருந்தது."

இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனியின் அந்த முழு பேட்டியின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"நடிகர்கள் மீது பெரிய மரியாதை வந்திருக்கிறது!"- கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்பெஷல் வீடியோ!

சினிமா

"அப்போ NO சொல்லி ESCAPE ஆயிட்டேன்!"- கருமேகங்கள் கலைகின்றன படத்தில் தங்கர் பச்சானுடன் இணைந்தது எப்படி? GVMன் பதில் இதோ

சினிமா

"கண்ணில் பார்க்கிற கடவுள் தான் அம்மா!"- தன் தாயின் தியாகம் குறித்து முதல் முறை மனம் திறந்த விஜய் ஆண்டனி! எமோஷனலான வீடியோ இதோ