"தெரியாமல் நடந்த Silly Mistake"- தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்... காரணம் என்ன? விவரம் உள்ளே

தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் காரணம் என்ன,vignesh shivan apologies to thalapathy vijay and lokesh kanagaraj fans | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தளபதி விஜய் ரசிகர்களிடமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டு தனது X பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தனக்கென தனி பாணியில் பக்கா ஃபீல் குட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்குமார் அவர்களை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சில காரணங்களால் அந்த படம் நடைபெறாமல் போனது. அடுத்ததாக தனது அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே X பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய ஒரு வீடியோவிற்கு லைக் போட்ட விக்னேஷ் சிவன் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த லைக்கை நீக்கி இருக்கிறார். முதலில் லைக் போட்டுவிட்டு பின்னர் அந்த லைக்கை நீக்குவதற்கான காரணம் என்ன என்று அந்த வீடியோவை போட்ட நபர் குறிப்பிட்டு பதிவிட, அதற்கு விளக்கமளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் அந்தப் பதிவில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். முன்னதாக அந்த நபர் பகிர்ந்த வீடியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் வீடியோவாக இருந்தாலும் அதன் மேல் குறிப்பிட்டு இருக்கும் "Caption"ல் செய்தி என்ன என்பதை படிக்காமல் அதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை பிடிக்கும் என்பதற்காகவே அவரை பார்த்தவுடன் லைக் போட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த செய்தி என்ன என்பதை தெரிந்தவுடன் அதனை நீக்கி இருக்கிறார். எனவே தெரியாமல் லைக் போட்டதற்காக தளபதி விஜய் ரசிகர்களிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதற்காக மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருக்கிறார். 

அந்த பதிவில், “அன்பான தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் என்னுடைய குழப்பத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவில் என்ன மெசேஜ் இருக்கிறது என்பதை கவனிக்காமல் அந்த வீடியோவில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை  மட்டும் பார்த்துவிட்டு தெரியாமல் லைக் போட்டுவிட்டேன். ஏனென்றால் நான் லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய ரசிகன் அவருடைய படங்களை மிகவும் ரசிக்கிறேன். மேலும் அவர் பேசும் விதம் அவரது பேட்டிகளையும் ரசிக்கிறேன். தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் பிரம்மாண்ட ரிலீஸ்க்காக நானும் காத்திருக்கிறேன். என்னுடைய கெட்ட நேரம் அந்த வீடியோவை நான் பார்க்கவும் இல்லை அதில் இருக்கும் ட்வீட்யும் நான் கவனிக்கவில்லை. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் மன்னித்து விடுங்கள். இது என் தரப்பில் இருக்கக்கூடிய ஒரு சில்லி மிஸ்டேக் இதற்காக உலகம் முழுக்க இருக்கும் தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளிவரக்கூடிய பிளாக்பஸ்டர் படமான லியோ திரைப்படத்திற்காக உங்களைப் போலவே நானும் உற்சாகத்தோடு காத்திருக்கிறேன். எனவே தயவு செய்து என்னுடைய இந்த சில்லி மிஸ்டேக்குக்காக உங்களுடைய அதிகப்படியான நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம்” என பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் அந்தப் பதிவு இதோ…
 

Dear Vijay sir fans , Loki fans … sorry for the confusion 🙏 without even seeing the msg , the context or the content of the video or the tweet , by jus seeing Loki’s interview I liked the video !
cos am a big fan of his works and his interviews and the way he speaks !
Am also… https://t.co/JIJymxI2mJ

— VigneshShivan (@VigneshShivN) October 8, 2023