பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த ஷாரூக் கான் - நயன்தாரா - அட்லீயின் ஜவான்... பாலிவுட் சினிமா வரலாற்றில் படைத்த அதிரடி சாதனை! 

ஷாரூக் கான் - அட்லீயின் ஜவான் படைத்த அதிரடி வசூல் சாதனை,shah rukh khan in jawan made new box office record in bollywood | Galatta

உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நடிகர் சாருக் கானின் ஜமான் திரைப்படம் பாலிவுட் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வரலாற்று சாதனை படைத்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நடிகர்களிலேயே உலக அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகராக பல கோடி ரசிகர்களுக்கு ஃபேவரட் ஹீரோவாக திகழும் நடிகர் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் ஷாருகானின் ஜவான் படமும் 1000 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நாயகரான ஷாருக் கான் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. 

ராஜா ராணி திரைப்படத்திலிருந்து தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய இயக்குனர் அட்லி அடுத்தடுத்து மூன்று படங்கள் தளபதி விஜயுடன் இணைந்து ஹட்ரிக் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக தற்போது பாலிவுட்டிலும் வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக ஷாருக் கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் ஜவான் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். GK.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள, ஜவான் திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய அதிரடியாக ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் ராக் ஸ்டார் அனிருத் அட்டகாசமாக ஜமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

இந்திய சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸான ஜவான் படம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று முதல் நாளிலேயே 129 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அடுத்தடுத்து முதல் நான்கு நாட்களில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாட்களிலும் நூறு கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் திரைப்படம் முதல் 4 நாட்களில் 520.79 கோடி ரூபாய் வசூலித்தது. ஷாருக்கானின் முந்தைய படமான பதான் திரைப்படம் மொத்தமாக 1050 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில் இந்த சாதனையை ஜவான் படம் எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் எதிர்பார்த்தபடியே தற்போது 1000 கோடி இலக்கை ஜவான் திரைப்படம் கடந்து இருக்கிறது. ரிலீஸாகி வெறும் 18 நாட்களில் 1000 கோடியை கடந்து இருக்கும் ஜவான் திரைப்படம் இதுவரை 1103.27 கோடிகள் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் ஹிந்தி படம் என்ற சாதனையை ஜவான் படம் படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தின் வரலாற்று வசூல் சாதனை குறித்து பட குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

Jawan 🤝 Making & breaking box office records every day! 🔥

Book your tickets now!https://t.co/uO9YicOXAI

Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/tPrks1X34L

— atlee (@Atlee_dir) October 6, 2023