தனுஷின் ACTION PACKED கேப்டன் மில்லர் பட "கில்லர்.. கில்லர்.." பாடலின் முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனர்!

தனுஷின் கேப்டன் மில்லர் முதல் பாடல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனர்,dhanush in captain miller movie killer song review by venky kudumula | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் படமாக வர இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த ஸ்பெஷல் தகவல் ஒன்றை பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். ஆகச்சிறந்த நடிகராக தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நிறுத்தி வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது திரைப்படமாக உருவாகும் D50 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் D51 படத்தில் அடுத்து தனுஷ் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் தனுஷ் இணைய இருக்கிறார்.  

இதனிடையே ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ரசிகர்கள் அனைவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடலுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக சலோ, பீஷ்மா படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி குடுமலா தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து ருசிகர தகவலை பகிர்ந்துள்ளார். இயக்குனர் வெங்கி குடுமலா தற்போது VNR Trio என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான கம்போசிங் பணிகளுக்காக ஜீவி பிரகாஷின் ஸ்டுடியோவிற்கு சென்ற இயக்குனர் வெங்கி குடுமலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜீவி பிரகாஷ், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான “கில்லர்.. கில்லர்..” பாடலை கேட்க வைத்திருக்கிறார். இந்தப் பாடலை கேட்டு அசந்து போன இயக்குனர் வெங்கி குடுமலா, "MINDBLOWING என்று சொன்னாலும் அது சிறிய வார்த்தை தான்.. என்ன ஒரு கில்லர் பாடல்.. படத்தை பார்ப்பதற்கு காத்திருக்க முடியவில்லை" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி குடுமலா கேப்டன் மில்லர் பாடல் குறித்து பதிவிட்ட இந்த X பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பதிவு இதோ...
 

In our music sittings today, @gvprakash bro happened to make me hear the ‘Killer…Killer…’ song from @dhanushkraja sir’s #CaptainMiller
Mind blowing is a small word 🔥❤️‍🔥
What a KILLER song…
Can’t wait for the world to witness it soon !

— Venky Kudumula (@VenkyKudumula) October 7, 2023