"இதுவரை யாருமே முயற்சி செய்யாத ஒரு CHASE"- தளபதி விஜயின் லியோ பட ஆக்சன் ட்ரீட் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

தளபதி விஜயின் லியோ பட ஆக்சன் ட்ரீட் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்,lokesh kanagaraj about chasing scene in thalapathy vijay in leo movie | Galatta

தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கி இருக்கும் லியோ திரைப்படத்தின் ஒரு அதிரடியான சேஸிங் சீன் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டார். இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்களில் ஒன்றாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ படம் ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2வது முறையாக தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருக்கிறது. 

மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் பக்கா ஆக்சன் படமாக லியோ இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்முடைய திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு இணைந்து உரையாடிய போது பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் முதல்முறையாக லியோ திரைப்படத்திற்காக CGயில் நிறைய பணியாற்றியது குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பேசும்போது,

“ஜனவரியில் தான் ஷூட்டிங் போகப் போகிறோம் என்று தெரிந்தாலும், அக்டோபரில் இருந்தே அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டோம். போன அக்டோபரில் இருந்து இந்த அக்டோபர் 12 மாதங்கள் CGகாக வேலை பார்த்திருக்கிறோம் இந்த 12 மாதத்திற்கான உழைப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் படத்தில் பார்க்கலாம். ட்ரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த கழுதை புலி காட்சி இருக்கிறது அல்லவா அது மாதிரி. டெக்னிக்கலாக பார்த்தாலும் இதுவரை இங்கே யாரும் முயற்சி செய்யாத CHASE ஒன்றை நாங்கள் செய்திருக்கிறோம். ஒரு இரண்டு பேர் உட்கார்ந்து பேசும்போது OS - OS தானே வைக்க முடியும் அதுவே ஆக்ஷனில் நிறைய முயற்சி செய்யலாம். அதுவும் மனோஜ் பரமஹம்சா மாதிரி ஒரு ஒளிப்பதிவாளர் அன்பறிவு மாஸ்டர்கள் மாதிரி ஒரு ஸ்டண்ட் இயக்குனர்கள் இருந்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனக்கு தெரிந்து மனோஜ் பரமஹம்சா அவர்களிடம் இருக்கும் ரிக்குகள் மாதிரி ரெகுகள் எந்த கம்பெனிலுமே இருக்காது என சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் அவ்வளவு ரிக்குகள் வைத்திருப்பார். நான் ஒன்று வேண்டும் என சொன்னால் அதை எப்படியாவது செய்து காட்டி விடுவார்” என தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…