பிக் பாஸ் தமிழ் சீசன் 7 முதல் வார எலிமினேஷன் இவரா?- வெளிவந்த EVICTION ரிசல்ட்டால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 முதல் EVICTION அனன்யா ராவ்,Ananya rao evicted from bigg boss tamil season 7 in first week | Galatta

இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், கூல் சுரேஷ் (நடிகர்), பவா செல்லதுரை (எழுத்தாளர், பேச்சாளர்) , விசித்ரா (நடிகை), விஷ்ணு (சின்னத்திரை நடிகர்),  வினுஷா தேவி (சின்னத்திரை நடிகை), பிரதீப் ஆண்டனி (நடிகர்), அக்ஷயா உதயகுமார் (நடிகை லவ் டுடே), ஐஷு (நடனக்கலைஞர்), சரவண விக்ரம் (சின்னத்திரை நடிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்), ஜோவிகா விஜயகுமார் (வனிதா விஜயகுமாரின் மகள்), யுகேந்திரன் (பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்), ரவீனா தாஹா (சின்னத்திரை நடிகை), மணி சந்திரா (நடன இயக்குனர்), விஜய் வர்மா (நடன இயக்குனர்), பூர்ணிமா ரவி (நடிகை), மாயா கிருஷ்ணன் (நடிகை), அனன்யா S ராவ் (இன்ஸ்டாகிராம் பிரபலம்) என 18 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.

கடைசியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த விஜய் வர்மா முதல் வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பம் முதலில் சர்ப்ரைஸ்களுக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த பிக் பாஸில் பிக் பாஸ் வீடு சின்ன பிக் பாஸ் வீடு ரெண்டு வீடு இருக்கும் தனித்தனியே விதிமுறைகள் லக்சரி பட்ஜெட்டில் இருந்து லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் வரை எல்லாமே இந்த முறை மாறி இருக்கிறது. பொருட்களை வாங்குவார்கள் தற்போது பொருட்களை வாங்கிய பிறகு லஞ்சரி பட்ஜெட்டில் விளையாடி கடனை தீர்க்க வேண்டும். விறுவிறுப்புக்கும் காரசாரமான விவாதங்களுக்கும் எந்த குறையும் இல்லாமல் நகர்ந்து வரும் இந்த பிக் பாஸ் சீசன் 7ல் பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை அவர்கள் கதை சொல்லியாக மாறி தினமும் தான் ரசித்த கதைகளை பிக் பாஸ் போட்டியாளர்களோடு பகிர்ந்து கொள்கிறார் அந்த வகையில் பிரபல எழுத்தாளர் பாலச்சந்திரன் சுல்லிக்காடு எழுதிய பிழை எனும் கதையை பவா செல்லதுரை அவர்கள் பகிர்ந்து கொண்டார். ஆனால் இந்த கதை மற்றவர்களுக்கு எப்படி புரிந்து கொண்டதோ தெரியவில்லை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கேள்விகளும் விவாதங்களும் கிளம்பின.

தொடர்ந்து மேக்கப் குறித்து மிகவும் அபத்தமான சில காரணங்களை சொல்லி பிரதீப் ஆண்டனி கிளப்பிய சர்ச்சை, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாயா கிருஷ்ணன் அக்ஷயா, ஜோவிகா, பூர்ணிமா ரவி செய்த தரமான செயல் என நகர்ந்த முதல் வாரத்தில் இறுதியில் ஒரு முக்கியமான டாஸ்கின் விவாதத்தின் போது கல்வி தொடர்பாக விசித்ரா பேசியதும், ஜோவிகா பேசியதும் மிகப்பெரிய எரிமலை வெடித்தது. “எல்லோருக்கும் நான் அம்மா மாதிரி” என ஒவ்வொருவரின் பர்சனலில் விஷயங்களிலும் விசித்ரா தன்னுடைய திணிப்பை வைக்கிறார் என எல்லோரும் ஒரு புறம் கருத்து சொல்ல “படிப்பதற்காக உயிரை விட முடியாது” என படிப்பு குறித்து ஜோவிகா தன்னுடைய கருத்தை மிகுந்த கோபத்தோடு வெளிப்படுத்தினார். 

இதற்கிடையே முதல் வாரத்தின் நாமினேஷனில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு எலிமினேஷனுக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் தற்போது முதல் வாரத்தில் எலிமினேஷனில் அனன்யா ராவ் EVICT-ஆகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த முறை பிக் பாஸில் அனன்யா ராவ் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக நீண்ட நாட்கள் தாக்கு பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வாரத்திலேயே மற்றவர்களை விட மிக குறைவான ஓட்டுகள் பெற்று அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.