'தொடர்ந்து FEEL GOOD படங்கள் இயக்கும் காரணம் என்ன?'- விக்னேஷ் சிவனின் மனதை மாற்றிய 2 படங்கள்... அசத்தலான சிறப்பு பேட்டி இதோ!

தொடர்ந்து FEEL GOOD படங்கள் இயக்கும் காரணத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்,vignesh shivan about why he directing feel good movies | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ச்சியாக FEEL GOOD திரைப்படங்களை வழங்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய AK62 படத்தில் அடுத்ததாக அஜித்குமார் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் அத்திரைப்படம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் விக்னேஷ் சிவன் வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் “கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்" சிறப்பு நேர்காணலில் சுஹாசினி மணிரத்னம் அவர்களோடு இணைந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரைப்பயண அனுபவங்கள் மற்றும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம், "இயக்குனர் என்ற பார்வையில் நீங்கள் தமிழ் சினிமாவில் நுழைந்தபோது, ஒருபுறம் இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் பாலா, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் சீரியசான இயக்குனர்கள், சமுதாயத்தில் யாரும் பார்க்காத விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் பார்த்தால் இயக்குனர் ஷங்கர், இயக்குனர் அட்லி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்கள் முழுக்க முழுக்க கமர்சியல் படங்கள் தான்.. இதற்கு நடுவே இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு FEEL GOOD என தனி இடம் அதை நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்? இங்கே நமக்கு என்ன இடம் எப்படி நம்மை இணைத்துக் கொள்ளலாம் என நினைத்தீர்கள்?" எனக் கேட்டபோது,

“பொதுவாக ஒரு குழுவாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் எல்லோருமே நகைச்சுவையான விஷயங்களை விரும்புவர்கள் எல்லோரும் சிரிக்கவே நினைப்பார்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது ஒரு நல்ல நேரம். யாருமே ஒரு எமோஷலான கதையையோ, கருத்தையோ கேட்க விரும்புவதில்லை. சில நேரங்களில் எமோஷனல் சென்டிமென்ட் எல்லாமே திரைப்படங்களில் சரியாக வேலை செய்கிறது. ஆனால் எனக்குத் தோன்றியது மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதும் சிரிக்க வைப்பதும் தான். எனவே காமெடி மாதிரியான விஷயங்கள் வைத்து படம் செய்ய விரும்புகிறேன். என பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் "இது மாதிரி படங்கள் செய்வதற்கு யாருமே இல்லை என நீங்கள் இது மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தீர்களா அல்லது யாரையாவது பார்த்து அதன் ஈர்ப்பால் இந்த மாதிரி படம் செய்கிறீர்களா?" எனக் கேட்டபோது,

"நான் என்னுடைய இயல்பாக என்ன வருகிறதோ அதை தான் செய்கிறேன். நான் முன்பு மிகவும் டெரரான கதைகள் எல்லாம் எழுதி வைத்திருந்தேன். பின்னர் ஒரு நாள் “மொழி” திரைப்படத்தையும் சென்னை 600028 திரைப்படத்தையும் பார்த்தேன். இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி, ஒருபுறம் ஜெயந்தி தியேட்டரில் ஒரு படமும் மறுபுறம் தியாகராஜன் தியேட்டரில் ஒரு படமும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த இரண்டு படங்களுமே ஒரு நாள் நண்பர்களோடு போய் பார்த்தேன். சென்னை 600028 திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பயங்கரமாக கொண்டாடினர். பின்னர் மொழி திரைப்படத்தை நான் அம்மா, என் தங்கை எல்லோருமே போய் பார்த்தோம். எங்கள் வீட்டில் அத்திரைப்படத்தை மிகவும் ரசித்தார்கள். அப்போது அந்த ஃபீல் குட் என்ற விஷயம் எங்கள் வீட்டில் சிக்கலின் காரணமாக இருந்த எங்களுடைய மோசமான மனநிலையை மாற்றியது. ஒரு திரைப்படம் நம்மளுடைய மனநிலையை முற்றிலுமாக மாற்ற முடிகிறது. சில நேரங்களில் நமக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதற்கான ஒரு தீர்வு ஒரு படத்தில் இருக்கிறது "பாரேன் அந்த படத்தில் சொன்ன மாதிரி" என கடந்து போவது போல, படமாக பார்க்கும்போது அதில் ஃபீல் குட் என்ற விஷயம் இருந்தால் அது இன்னும் நன்றாக இருக்கும் என அந்த திரைப்படங்களை பண்ணலாம் என தோன்றியது.” என பதில் அளித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட கேம் சேன்ஜர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டி இதோ…
 

கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ
சினிமா

கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ

தல தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் LGM ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

தல தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் LGM ஃபர்ஸ்ட் லுக் இதோ!

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷனில் வரும் கஸ்டடி!'- ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த முதல் பாடல்! அசத்தலான வீடியோ இதோ
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷனில் வரும் கஸ்டடி!'- ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த முதல் பாடல்! அசத்தலான வீடியோ இதோ