நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த தருணம்... முதல் முறை விக்னேஷ் சிவன் பகிர்ந்த நானும் ரவுடிதான் நினைவுகள்! வைரல் வீடியோ

நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த தருணம் குறித்து பகிர்ந்த விக்னேஷ் சிவன்,vignesh shivan relationship with nayanthara at naanum rowdy thaan | Galatta

தனக்கென தனி பாணியில் அழகான பீல் குட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் அடுத்ததாக கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்க திட்டமிட்டு இருப்பது தான். தறபோது இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்புகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் ஜோடியான ராம் மற்றும் ஜானு இருவரும் கலந்து கொண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சில கேள்விகள் கேட்டனர். அந்த வகையில், “நயன்தாரா இவர்தான் நம் வாழ்க்கையில் இனி எல்லாமே என நினைத்த அந்த தருணம்... உங்கள் பாஷையில் சொல்லப்போனால் தூக்குறோம் அந்த பொண்ண கடத்துறோம் என முடிவு செய்த அந்த தருணம் எது?” என கேட்டபோது, 

“அந்த மாதிரி நினைத்ததே இல்லை கடத்துறோம்.. தூக்குறோம்… அந்த மாதிரி எல்லாம் இல்லை. இது மிகவும் இயற்கையாக நடந்து ஒன்று தான். எந்த ஒரு புள்ளியிலும் அப்படி எல்லாம் நான் நினைத்ததே இல்லை. அப்போது நான் இயக்குனராக இருந்தேன் அல்லவா? எனவே நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் நடிப்பது அதில் அந்த பெர்ஃபார்மன்ஸை சிறப்பாக எப்படி செய்வது அதில் மட்டும் தான் நான் கவனத்தை செலுத்தினேன். போகப் போக அது ஒரு இடத்திற்கு வந்தது. எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு பிடித்தது… பேச ஆரம்பித்தோம். அப்படிதான் அது நடந்தது. அது மிகவும் இயல்பாக அந்த இடத்திற்கு போய்விட்டது. அதற்கு நான் எதுவும் பண்ணவில்லை. அதன் பிறகு அந்த ரிலேஷன்ஷிப் ஆன பிறகும் எனக்கு படத்தின் பாதி... அதன் பிறகு மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடத்தினோம். அந்த மூன்று ஷூட்டிங்கிலும் நான் முதல் நாளில் எப்படி பணியாற்றினேனோ அப்படியே தான் பணியாற்றினேன். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் நான் 'MAM' என்று தான் அவரை கூப்பிடுவேன். அதன் பிறகும் கூட அந்த மரியாதையை நான் கடைப்பிடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். பின்னர் வெளியில் செய்திகள் தெரிந்த பிறகுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதற்கு முன்னாடி வரைக்கும் கொஞ்சம் அமைதியாக நான் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தேன். அது தான் நான் நேர்மையாக என்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.” என பதில் அளித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!
சினிமா

MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!

'எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ லாரன்ஸ் தான்!'- சந்திரமுகி 2 பட மாஸ் அப்டேட் கொடுத்த ராதிகா சரத்குமார்... வைரலாகும் Shooting Spot புகைப்படங்கள் இதோ!
சினிமா

'எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ லாரன்ஸ் தான்!'- சந்திரமுகி 2 பட மாஸ் அப்டேட் கொடுத்த ராதிகா சரத்குமார்... வைரலாகும் Shooting Spot புகைப்படங்கள் இதோ!

கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே
சினிமா

கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே