கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே

கிச்சன் 46 பட டீசர் ரிலீஸ் தாமதம் குறித்து தயாரிப்பாளர் தாணு பதில்,vaadivaasal producer kalaippuli s thanu about kiccha46 teaser delay  | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர தயாரிப்பாளராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அடுத்து தயாரிக்கும் கிச்சா 46 படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் உடன் கைகோர்த்துள்ளார். அந்த வகையில் கிச்சா 46 திரைப்படத்தின் டீசர் ரிலீஸில் இருக்கும் தாமதம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தற்போது பதில் அளித்திருக்கிறார். முன்னதாக  ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் முறையாக சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார். வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக நுணுக்கமான பிரம்மிக்க வைக்கும் VFX காட்சிகள் வாடிவாசல் திரைப்படத்திற்கு தேவைப்படுவதால் அதற்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி நிறுவனத்தோடு இணைந்து லண்டனில் தங்கி இருந்து அந்த CG பணிகளை இயக்குனர் வெற்றிமாறன் தற்போது கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது தயாரிப்பில் அடுத்த திரைப்படமாக கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக விளம்பரம் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிலான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த கிச்சா சுதீப்  தொடர்ந்து SS.ராஜமௌலியின் பாகுபலி, மற்றும் சல்மான் கானின் தபாங் 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்த விக்ராந்த் ரோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் 46வது திரைப்படமாக உருவாகும் புதிய #கிச்சா46 திரைப்படத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களுடன் கிச்சா சுதீப் கைகோர்த்துள்ளார். 

தென்னிந்திய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளிவந்த இந்த அறிவிப்பு வெளிவந்த கொஞ்ச நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்தது கிச்சா 46 திரைப்படம். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கிச்சன் 46 படத்தை அறிவிக்கும் வகையில் அதிரடியான புதிய வீடியோ ஒன்றை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விரைவில் டீசருடன் சந்திக்கிறோம் என கடைசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது டீசர் வெளியாவது தாமதம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இது குறித்து கலைப்புலி. S .தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில் அற்புதமான விஷயங்களுக்கு நேரம் எடுக்கும் கடைசியில் தரமான படைப்பு கிடைப்பதற்காக போஸ்ட் புரொடக்ஷனில் ஒரு சிறிய தாமதம் இருக்கிறது. கிச்சா சுதீப் அவர்களின் கிச்சா 46 திரைப்படத்தின் மீதி இருக்கும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் கைவிடவில்லை விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கலைப்புலி .S. தாணு அவர்களின் அந்த பதிவு இதோ…
 

Great things take time, although there's a minor delay in the post-production's final output, we're leaving no stone unturned to ensure our Baadshah @KicchaSudeep #Kiccha46 teaser exceeds all expectations. The release date of the teaser will be announced soon.

— Kalaippuli S Thanu (@theVcreations) May 28, 2023

'இன்னும் 4 நாட்களில் திருமணம்!'- எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்துக்கு கார் விபத்து... நடந்தது என்ன? விவரம் உள்ளே
சினிமா

'இன்னும் 4 நாட்களில் திருமணம்!'- எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்துக்கு கார் விபத்து... நடந்தது என்ன? விவரம் உள்ளே

ஹிப் ஹாப் தமிழா ஆதியின்
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "வீரன்" திருவிழா கொண்டாட்டம்... சர்ப்ரைஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சினிமா

"தமிழன்டா" எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... காரணம் என்ன? விவரம் இதோ!