சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட அதிரடியான அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..

மாவீரன் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன் - Sivakarthikeyan maaveeran dubbing starts | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றியை பெற்ற யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்தினை ஷாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்துள்ளார். மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநயாகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதீ ஷங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் அனிருத் குரலில் ‘சீனா சீனா’ என்ற முதல் பாடல் வெளியாகி டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

நகர்புற வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் முதல் பார்வை முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படம் தற்போது டப்பிங் பணியில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழு தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் 14 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள மாவீரன் படத்திற்காக அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “வீரமே ஜெயம்” என்ற வசனத்துடன் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணியை துவங்கிறார். இந்த வீடியோ தொகுப்பை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். அதிரடியாக வந்த மாவீரன் அப்டேட்டினால் ரசிகர்கள் கொண்டாடி வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

 

Marching ahead💪 @Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #Maaveeran #Mahaveerudu#VeerameJeyam 💪🏼@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @dineshmoffl @SunTVpic.twitter.com/B58a26D7NC

— Shanthi Talkies (@ShanthiTalkies) May 29, 2023

மாவீரன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சியும் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை அமேசான் பிரைம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன் படத்தை தொடர்ந்து வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பிரம்மாண்ட Sci-fi திரைப்படமாக இயக்குனர் ஆர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது, தொடர் அப்டேட்டுகளையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்  கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வது நாளிலும் வசூல் வேட்டையில் தீவிரம்..  உற்சாகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு.. – வசூல் விவரம் உள்ளே..
சினிமா

24 வது நாளிலும் வசூல் வேட்டையில் தீவிரம்.. உற்சாகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு.. – வசூல் விவரம் உள்ளே..

குடும்பங்கள் கொண்டாடும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

குடும்பங்கள் கொண்டாடும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..