ஐ.பி.எல் பார்க்க வந்து ஏமாற்றம்.. வருத்தத்தில் விக்னேஷ் சிவன் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு உள்ளே..

ஐபிஎல் இறுதி போட்டி குறித்து விக்னேஷ் சிவன் கருத்து வைரல் பதிவு இதோ - Vignesh shivan about ipl final match | Galatta

உலகளவில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்க்கும் விளையாட்டு போட்டியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இருந்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டி இந்தாண்டும் கோலாகலமாக துவங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு போட்டியில் சிறப்பாக விளையாடி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரை இறுதி போட்டியில் முதல் இடம் வகித்தது. பின் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் தேர்வாகியிருந்தது.

நடந்த அரையிறுதியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் தோல்வியடைந்து வெளியேற இறுதி சுற்றில் காலடி எடுத்து வைத்தது சென்னை மற்றும் குஜராத் அணிகள். திட்டமிட்டபடி நேற்று மே 28 ம் தேதி ஐபிஎல் 2023 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. போட்டி துவங்குவதற்கு முன்னரே மழை குறிக்கிட்டதால் போட்டி தாமதமானது. இந்த போட்டியை காண பல மாநிலங்களில் இருந்து பல லட்ச ரசிகர்கள் வந்திருந்தனர். இரவு 11 மணி ஆகியும் மழை விடாமல் பெய்ததால் போட்டி இன்று மே 29 ம் தேதி மாற்றப்பட்டது. இன்றும் மழை தொடர்ந்தால் புள்ளி பட்டியல் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இறுதி போட்டி குறித்து ரசிகர்கள் வருத்தத்தில் தற்போது இன்றைய போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவர்கள் நேற்றைய இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ரசிகராய் கலந்து கொண்டிருந்தார். மழை குறிக்கிட்டதால் போட்டியை காண முடியாமல் வருத்தத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “முழு போட்டியை காண பிராத்தனை செய்து வருகிறேன்” என்று குறிப்பிட்டு மைதானத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரது பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பிரான்ஸ் ல் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கெடுத்து கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார். விழா முடிந்த நிலையில் கையோடு அகமதாபாத் ஐபிஎல் இறுதி போட்டியை காண வந்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமாக நேற்றைய நிகழ்வு அமைந்துள்ளது. இன்று முழு போட்டியை காண பிராத்தனைகளுடன் அவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிர சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள். நடப்பு ஐபிஎல் போட்டியில் பல போட்டிகளை நேரில் சென்று கண்டு களித்துள்ளார். ஒரு போட்டியில் தன் மனைவும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சேர்ந்து போட்டியை பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.  

குடும்பங்கள் கொண்டாடும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

குடும்பங்கள் கொண்டாடும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..

“உண்மை கதை என்று சொன்னால் மட்டும் போதாது..” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக கமல் ஹாசன் கருத்து.. - விவரம் உள்ளே..
சினிமா

“உண்மை கதை என்று சொன்னால் மட்டும் போதாது..” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக கமல் ஹாசன் கருத்து.. - விவரம் உள்ளே..