ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட் "வீரன் திருவிழா"... ரசிகர்கள் கொண்டாடும் அட்டகாசமான GLIMPSE இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் பட 3வது பாடல் வெளியீடு,hiphop tamizha adhi in veeran movie 3rd single veeran thiruvizha out now | Galatta

ட்ரெண்டிங் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனம் கவர்ந்து தற்போது ஹீரோவாகவும் அசத்தி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ படமாக தயாராகி இருக்கும் வீரன் திரைப்படத்திலிருந்து அடுத்த கொண்டாட்டமாக வீரன் திருவிழா எனும் பாடல் தற்போது வெளியானது.  சுயாதீன இசை கலைஞராக பல சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பின்னர் தமிழ் சினிமாவில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் களமிறங்கி கலக்கிய ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து தற்போது கதாநாயகனாக அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தனது அடுத்த புதிய திரைப்படமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகும் PT Sir திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த PT Sir திரைப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னல் முரளி திரைப்படத்தின் பாணியில் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் படம் தான் வீரன். முன்னதாக மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள வீரன் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற வெள்ளிக் கிழமை ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வீரன் திரைப்படத்தின் தற்போது அடுத்த சர்ப்ரைஸாக வீரன் திருவிழா எனும் பாடல் தற்போது வெளியானது. வீரன் படத்தின் மூன்றாவது பாடலாக வெளிவந்துள்ள இந்த வீரன் திருவிழா பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அட்டகாசமான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
 

'எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ லாரன்ஸ் தான்!'- சந்திரமுகி 2 பட மாஸ் அப்டேட் கொடுத்த ராதிகா சரத்குமார்... வைரலாகும் Shooting Spot புகைப்படங்கள் இதோ!
சினிமா

'எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ லாரன்ஸ் தான்!'- சந்திரமுகி 2 பட மாஸ் அப்டேட் கொடுத்த ராதிகா சரத்குமார்... வைரலாகும் Shooting Spot புகைப்படங்கள் இதோ!

கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே
சினிமா

கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே

உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ
சினிமா

உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ