துல்கர் சல்மானின் மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரம்... கிங் ஆஃப் கோதா பட அதிரடியான ஷூட்டிங் அப்டேட் இதோ!

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது,dulquer salmaan in king of kotha movie shoot wrapped in kochi | Galatta

அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படமாக அடுத்து வெளிவர தயாராகி வரும் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியானது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹே சினாமிக்கா சல்யூட், சீதாராமம் சுப் - ரிவெஞ் ஆப் தி ஆர்டிஸ்ட்  என்று வரிசையாக தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்து என நான்கு மொழிகளில் துல்கர் சல்மான் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளிவந்து  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று சூப்பர் ஹிட்டாகின. இதனிடையே வெப் சீரிஸிலும் களமிறங்கி துல்கர் சல்மான், ஃபேமிலி மேன் & ஃபர்சி வெப் சீரிஸ்களின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளிவர இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிசிலும் முன்னணி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். ஹிந்தியில் தயாராகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. 

இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் தான் கிங் ஆஃப் கோதா. 1980களில் நடைபெறும் கதைக்களமாக அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கிங் ஆப் கோதா படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

துல்கர் சல்மானின் முந்தைய படங்களான குருப், சீதாராமம் திரைப்படங்களை தொடர்ந்து, துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆஃப் கோதா திரைப்படமும் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கிறது. கிங் ஆஃப் கோதா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக காரைக்குடியில் தொடர்ச்சியாக 95 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்து இருக்கும் நிலையில், கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின்  மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பை படக்குழுவின் நிறைவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே ஓணம் ரிலீஸுக்காக கிங் ஆஃப் கோதா படத்தின் இருந்துகிட்ட பணிகளில் படக் குழுவினர் அடுத்து முழுவீச்சில் செயல்பட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே
சினிமா

கிச்சா 46 பட டீசர் ரிலீஸில் தாமதம் ஏன்..? மௌனம் கலைத்த வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு! விவரம் உள்ளே

உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ
சினிமா

உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ

செல்ல மகனுக்கு செம்ம பெயர் வைத்த விஜய் டிவி பிரபலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

செல்ல மகனுக்கு செம்ம பெயர் வைத்த விஜய் டிவி பிரபலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் வீடியோ இதோ!