தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து வித்தியாசமான என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் வெங்கட்பிரபு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 

முன்னதாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாநாடு. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.T.R.ன் திரைப்பயணத்தின் சிறந்த கம்பாக் திரைப்படமாக அமைந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் மன்மத லீலை. 

நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் மன்மதலீலை திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  முக்கிய வேடத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடித்துள்ளார்.ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து வழங்கும் மன்மத லீலை படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

மன்மத லீலை(A Venkat Prabhu Quickie) படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி மன்மதலீலை திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில்  மன்மதலீலை படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோகள் தற்போது வெளியானது. மன்மதலீலை பட கலக்கலான புதிய ப்ரோமோ வீடியோகள் இதோ…