சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சர்ப்ரைஸ் உடன் வந்த ஏ ஆர் ரஹ்மான்.. - 2nd Single வீடியோவை வெளியிட்ட படக்குழு..

பத்து தல படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட் இதோ -  Here is AR Rahman Pathu thala 2nd single promo | Galatta

சமீபத்தில் அதிகம் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் நடிகர் சிலம்பரசன் TR. உடல் பருமனால் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சிம்பு. தன் கடின முயற்சியினால் உடல் எடையை குறைத்து தனது இரண்டாவது ஆட்டத்தை வெறித்தனமாக தொடங்கினார். அதன்படி ‘மாநாடு வெந்து தணிந்தது காடுஎன்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் இனைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன்  கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 30அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதே நேரத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ளார்.  

அதன்படி கடந்த சில தினங்களாக சிலம்பரசன் டிரெண்டிங்கிலே இருந்து வருகிறார். இந்நிலையில் சிலம்பரசன் நடித்து இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள பத்து தல படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் முன்னதாக வெளியான படத்தின் முதல் பாடல் ‘நம்ம சத்தம்’ பாடல் இணையத்தில் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பத்து தல படத்தின் இரண்டாவது பாடல் சிறப்பு வீடியோவாக உருவாகி வருகிறது என்ற தகவல் முன்னதாக வெளியானது. அந்த வீடியோவில் இருந்து புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் ஓபெலி   கிருஷ்ணன் காட்சியை விளக்க கவிஞர் கபிலன் பாடல் வரிகளை எழுதுகிறார். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் அவரது மகன் அமீன் ரகுமான் இப்பாடலை பாடுகிறார். இந்த பாடல் வரும் மார்ச் மாதம் 13ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

ஏ ஆர் அமீன் இதற்கு முன்பு ‘ஒகே கண்மணி’, ‘2.0’,’தில் பேச்சாரா’, ‘அதிரங்கி ரேபோன்ற பல படங்களில் பாடியுள்ளார் மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘டாலா அல் பத்ரு அல்யான’ என்ற ஆன்மீக பாடலையும் பாடியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சுயாதீனமாக நிறைய பாடல்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பான கட்டத்தில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்… ட்ரெண்டாகும் சஞ்சய் தத்தின் அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்… ட்ரெண்டாகும் சஞ்சய் தத்தின் அதிரடியான புது GLIMPSE இதோ!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் 'கொட்டுக்காளி' படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ.. – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த Glimpse இதோ..
சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் 'கொட்டுக்காளி' படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ.. – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த Glimpse இதோ..

சிவகார்த்திகேயனின் மாஸான
சினிமா

சிவகார்த்திகேயனின் மாஸான "மாவீரன்" பட டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய முன்னணி OTT நிறுவனம்! அட்டகாசமான அறிவிப்பு இதோ