சந்திரலேகா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். படங்கள் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானார். பிக் பாஸ் 3 வீடு பரபரப்பாக இருந்ததற்கு காரணமே வனிதா தான். அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தான் அவ்வப்போது பேசப்படுகிறது. கடந்த மாதம் பீட்டர் பாலுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் இருக்கும் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பீட்டர் பால் வீடு திரும்பினார். 

வீடு திரும்பிய பீட்டர் பால் வனிதா பற்றி கூறியதாவது, எனக்கு திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போச்சு. ராமசந்திரா மருத்துவமனையில் தான் அட்மிட் ஆகியிருந்தேன். பரிபூரணமாக குணமாகி வீடு திரும்பினேன். இன்று நான் வீட்டிற்கு திரும்பி வந்து உங்களிடம் எல்லாம் பேச முக்கியமான காரணம் வனிதா தான். நான் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது அம்மா ஸ்தானத்தில் இருந்து என்னை பார்த்துக் கொண்டார். அப்ப தான் நினைச்சேன், வாழ்க்கையில் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று. வனிதா இல்லை என்றால் நான் இல்லை. எனக்கு இன்னொரு அம்மா மாதிரி இருந்து பார்த்துக் கொண்டார் என்றார்.

இந்நிலையில் வனிதாவின் வீட்டில் லக்ஷ்மி குபேரன் பூஜை நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது, வீட்டில் லக்ஷ்மி குபேரன் பூஜை. 2020ம் ஆண்டில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருவது என்பது அதிசயம். அதை கடவுளால் மட்டுமே செய்ய முடியும். நான் கடவுளின் திட்டப்படி செல்கிறேன். என் நம்பிக்கையும், நல்லவைகளும் என்னையும், என் குடும்பத்தாரையும் காக்கும். வாழ்க்கை மற்றும் கடவுளின் சக்தியை கற்றுக் கொடுத்துள்ள இந்த வருடத்தை மறக்க முடியாது என்று பதிவு செய்துள்ளார். 

வனிதாவின் இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் கூறியிருப்பதாவது, இனி உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கும். பணம் கொட்டோ கொட்டு என கெட்டும். நீங்கள் சந்தோஷமாக இருங்கள் அக்கா என்று வாழ்த்தியுள்ளனர்.