நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு விபத்திலிருந்து தப்பிய விஷால் - Accident in vishal mark antony shooting | Galatta

ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலே விஷால் படம் என்ற நம்பிக்கையை தமிழ் சினிமாவில் ஆணித்தரமாக நிருபித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விஷால். ஆரம்பகால படங்களில் இருந்து  அட்டகாசமான சண்டை காட்சிகளில் அசத்தி வரும் விஷால். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதன் படி பல படங்களில் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னதாக விஷால் நடிப்பில் வெளியான 'லத்தி' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் மிக முக்கியமான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார்  தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை கிளாசிக் கதைக்களத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் அசத்தலான கெட்டப்பில் இது இதுவரை  ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான கெட்டப் ரசிகர்களை மேலும் கவர்ந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘புஷ்பா’ பட புகழ் நடிகர் சுனில் சமீபத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவுள்ளர்.

மிக மும்முரமாக மார்க் ஆண்டனி படபிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது காட்சிக்காக வைக்கப்பட்ட லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து படப்பிடிப்பு தளத்திற்குள் வந்தது. படபிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் விஷால், நடிகர் எஸ் ஜே சூர்யாவை நோக்கி லாரி வேகமாக வந்தது. கண் இமைக்கும் நொடியில் லாரி வேகமாக படபிடிப்பு செட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை.   

இதில் சற்று கொஞ்சம் இடைவெளியில் விஷாலின் கால் தப்பியதாக விஷால் தனது வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தள விபத்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவுடன் விஷால், “சில நொடிகளில் சிறிது இடைவெளியில் எனது வாழ்க்கை மாறிருக்கும்.. பிரபஞ்சத்திற்கு நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்.

Jus missed my life in a matter of few seconds and few inches, Thanks to the Almighty

Numb to this incident back on my feet and back to shoot, GB pic.twitter.com/bL7sbc9dOu

— Vishal (@VishalKOfficial) February 22, 2023

மேலும் எஸ் ஜே சூர்யா விஷால் பகிர்ந்த வீடியோவை பகிர்ந்து “கடவுளுக்கு நன்றி.. நூலிழையில் உயிர் தப்பினோம்.."தற்செயலாக நேராக வரவேண்டிய லாரி.. கொஞ்சம் பாதை மாறி வந்தது.. அது நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது ட்வீட் செய்திருக்க மாட்டோம். இதிலிருந்து காப்பாற்றியதற்கு கடவுளுக்கு நன்றி” என்று சம்பத்தை விளக்கி குறிப்பிட்டுள்ளார் நடிகர் எஸ் ஜே சூர்யா. 

Really really thx to god 🙏noolizhaiil Uire thappinom …. Accidentally, instead of taking the straight root , lorry went little diagonal and accident happened, if it would have come straight we both wouldn’t have been tweeting now Yah great thx to GOD we all got escaped 🙏🙏🙏🙏 https://t.co/RKgvCJZL3z

— S J Suryah (@iam_SJSuryah) February 22, 2023

முன்னதாக விஷால் நடிப்பில் வெளியான ‘வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்களில் சில விபத்துகள் ஏற்பட்டது அதில் விஷால் சிறு காயங்களுடன் தப்பித்தார். தொடர்ந்து இதுபோன்ற ஆபத்தான சண்டை காட்சிகளில் விஷால் நடிப்பதால் அவரது ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்.. கண்ணீர் விட்டு அழுத சிவமணி.. - முழு வீடியோ இதோ..
சினிமா

மறைந்த மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்.. கண்ணீர் விட்டு அழுத சிவமணி.. - முழு வீடியோ இதோ..

விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான  Surprise Gift.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான Surprise Gift.. வைரல் பதிவு இதோ..

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. -  வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..