'இன்னும் 4 நாட்களில் திருமணம்!'- எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்துக்கு கார் விபத்து... நடந்தது என்ன? விவரம் உள்ளே

கார் விபத்தில் சிக்கிய எங்கேயும் எப்போதும் நடிகர் ஷர்வானந்த்,Popular telugu actor sharwanand met an with car accident | Galatta

தனது திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஷர்வானந்த் தற்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகராக வலம் வரும் ஷர்வானந்த் விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ஷர்வானந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வெளிவந்த காதல்ன்னா சும்மா இல்லை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த ஷர்வானந்த் தமிழ் திரை உலகில் மிக பிரபலமடைந்தார். 

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷர்வானந்த் தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆக தயாரான ஜானு திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். கடைசியாக நடிகர் ஷர்வானந்த் நடித்த ஒகே ஒக்க ஜீவிதம் படம் தமிழில் கணம் என்ற பெயரில் வெளியானது. நல்ல ஒரு FEEL GOOD திரைப்படமாக ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலும் பெற்ற கணம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 35 வது படமாக உருவாகும் ஷர்வா35 படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக ரக்ஷிதா செட்டி என்பவரை ஷர்வானந்த் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் இவர்களது திருமணம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ஷர்வானந்த் கார் விபத்தில் சிக்கியதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 2 மணி அளவில் ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் நகர் ஜங்ஷனிலிருந்து தனது ரேஞ்ச் ரோவர் காரில் இருந்து புறப்பட்ட ஷர்வானந்த் காரை ஓட்டி சென்ற போது தவறான பாதையில் வந்த பைக் உடன் மோதுவதில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் நடிகர் ஷர்வானந்த் மிகுந்த காயம் அடைந்திருப்பதாகவும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகர் ஷர்வானந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். “இன்று அதிகாலை விபத்தில் சிக்கினேன் மிக சிறிய விபத்து தான் நான் மிகவும் நலமாக வீட்டில் இருக்கிறேன்… என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் உங்கள் அனைவரின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி…” என பதிவிட்டு இருக்கிறார். திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் ஷர்வானந்த் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்ததாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகர் சரவணன் நடிகர் ஷர்வானந்தின் அந்த பதிவு இதோ…
 

There has been news that my car met with an accident this morning. It was a very minor incident.

I am absolutely safe and sound at Home with all your love and blessings. There is nothing to worry about. Thank you all for your concern.

Have a great Sunday everyone.

— Sharwanand (@ImSharwanand) May 28, 2023

சினிமா

"அஞ்சலியின் 50வது படம்!"- ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!

'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!