மாமன்னன் வெற்றியையடுத்து மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை வியந்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..! – விவரம் உள்ளே..

மாரி செல்வராஜின் வாழை படத்தை வியந்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் - Udhaynidhi stalin appreciates mari selvaraj vaazhai | Galatta

கடந்த ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின். வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்து வழங்கிய இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய RK செல்வராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஆல்பம் ஹிட் அடித்து இன்றும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பரியேரும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி உலகளவில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் உலகளவில் வரவேற்பையடுத்து கடந்த ஜூலை 14 ம் தேதி மாமன்னன் திரைப்படம் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு ‘நாயகுடு’ என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இந்த ஆண்டு வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வரவேற்பை இயக்குனர் மாரி செல்வராஜ் இணையத்தில் பகிர்ந்து

அதனுடன் மாரி செல்வராஜ், “அன்புள்ள உதயநிதி ஸ்டாலின் சார். நீங்கள் எனக்கு ஒரு வழிகாட்டியாக ஆரம்பத்தில் இருந்தே இந்த பயணத்தில் இருந்து வருகிறீர்கள்.. உங்கள் நம்பிக்கையே மாமன்னன் படத்தின் வெற்றியாக அமைந்துள்ளது. இது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல நீங்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இந்த வெற்றி உங்களுக்கே உரித்தானது. நன்றி “ என்று குறிப்பிட்டிருந்தார்.

Dear @Udhaystalin Sir,
You have been my best well wisher from the beginning of this tremendous journey. Your faith in me and my artform have pushed me to go beyond limits with #Maamannan and the results have been humungous. There isn't a word to express my gratitude towards your… pic.twitter.com/IGJJ7wafof

— Mari Selvaraj (@mari_selvaraj) July 21, 2023

பின்னர் அந்த பதிவை உதநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து அதனுடன் வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார். அந்த பதிவில், “வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thx sir ! Love u ! #Vaazhai is gonna be your best ! Waiting for your magic again 😘 https://t.co/ibllOpjQ3n

— Udhay (@Udhaystalin) July 21, 2023

இயக்குனர் மாரி செல்வராஜ் சொந்த தயாரிப்பில் இயக்கி இறுதிகட்ட பணியில் இருக்கும் வாழை திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நிக்கிலா விமல், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கின்றார்.

இப்படத்தையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் நீலம் தயாரிப்பின் கீழ் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் நடிகர் தனுஷ் கூட்டணியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

 திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் ‘மாவீரன்’.. சர்ப்ரைஸாக வெளியான சிவகார்த்திகேயன் - யோகி பாபு  வீடியோ..
சினிமா

திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் ‘மாவீரன்’.. சர்ப்ரைஸாக வெளியான சிவகார்த்திகேயன் - யோகி பாபு வீடியோ..

“அனைத்து புகழும் வசந்தபாலன் சாருக்கு மட்டுமே சேர வேண்டும்” அநீதி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

“அனைத்து புகழும் வசந்தபாலன் சாருக்கு மட்டுமே சேர வேண்டும்” அநீதி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. வைரல் பதிவு உள்ளே..

“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..
சினிமா

“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..