தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் பிரபல நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின்  காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

நடிகர், இயக்குனர் & பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , கனா படத்திற்கு பிறகு இயக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் சிவாங்கி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். 

முன்னதாக  நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலிருந்து எமோஷனலான எங்கே நீதி எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது பாடகி அனன்யா பட் பாடியுள்ள எங்கே நீதி பாடல் இதோ…