மாவீரன் ப்ரொமோஷனில் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்த சிவகார்த்திகேயன்... குவியும் பாராட்டுகள்! வைரலாகும் வீடியோ உள்ளே

மாவீரன் ப்ரொமோஷனில் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்த சிவகார்த்திகேயன்,sivakarthikeyan green india challange for maaveeran promotion | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மாவீரன் திரைப்படத்தின் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்து மரம் நடவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து பக்கா ட்ரீட் கொடுக்கும் வகையிலான திரைப்படங்கள் வரிசையாக வர இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர். 

முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகிறது. அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . சமீபத்தில் SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்று ஆஸ்காருக்கான போட்டி வரை சென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் பட டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழில் மாவீரன் மற்றும் தெலுங்கில் மகாவீருடு என ஒரே தினத்தில் வெளியாகும் இப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளும் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் மரம் நடவு செய்திருக்கிறார். புவி வெப்பமயமாதலுக்கு எதிராக கிரீன் இந்தியா சேலஞ்சில் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பல லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் மஹாவீருடு படத்தின் ப்ரொமோஷனாக ஹைதராபாத்தில் இருக்கும் கே பி ஆர் பார்க்கில் மரம் நடவு செய்த சிவகார்த்திகேயன் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்து இருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வின் வீடியோ இதோ…
 

Tamil star @Siva_Kartikeyan takes a green stance! 🌿🌍 Promoting his new movie 'Mahaveerudu', Sivakarthikeyan planted a sapling today in Hyderabad's KBR Park as part of the #GreenIndiaChallenge. Expressing his happiness, he calls on all to join this movement against global… pic.twitter.com/IqbKT59CNK

— Santosh Kumar J (@SantoshKumarBRS) July 8, 2023

அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!

'ரஜினி சார் போன்ல பேசினதும் குதிச்சிடே இருந்தேன்'- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் பாடிய ஷில்பா ராவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'ரஜினி சார் போன்ல பேசினதும் குதிச்சிடே இருந்தேன்'- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் பாடிய ஷில்பா ராவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

'கதைகள் கட்டுவதை நிறுத்துங்கள்!'- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த க்ரித்தி ஷெட்டி! விவரம் உள்ளே
சினிமா

'கதைகள் கட்டுவதை நிறுத்துங்கள்!'- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த க்ரித்தி ஷெட்டி! விவரம் உள்ளே