நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக தயாராகி வரும் மிஷின் சாப்டர் 1 திரைப்படத்திலிருந்து புதிய மேக்கிங் வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை மற்றும் சினம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து மீண்டும் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. அந்த வகையில், முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படமும், இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் & விஜய் ஆண்டனி இணைந்து நடித்த அக்னி சிறகுகள் திரைப்படமும் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
அடுத்ததாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த வரிசையில் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் அதிரடி ஆக்சன் படம் தான் மிஷன் சாப்டர் 1. முதலில் அச்சம் என்பது இல்லையே என பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மிஷின் சாப்டர் 1 என அறிவிக்கப்பட்டது தற்போது மிஷன் - சாப்டர் 1 டைட்டிலுடன் அச்சம் என்பது இல்லையே என்ற வாசகத்தோடு படம் வெளிவர இருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக இயக்கிய தலைவி திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படமாக இயக்குனர் AL.விஜய், மிஷன் - சாப்டர் 1 படத்தை இயக்கியுள்ளார்.
அர்ண விஜயுடன் இணைந்து எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஷன் - சாப்டர் 1 திரைப்படத்தில் அபி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்ய ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். A.மகாதேவ் கதை திரைக்கதையில் இயக்குனர் விஜய் வசனம் எழுதி இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் மிஷன் சாப்டர் 1 படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மிஷன் சேப்டர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடை நிலையில் தற்போது இறுதி கட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றனர்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் அருண் விஜயின் மிஷன் - சாப்டர் 1 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்த நிலையில் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் அனல் பறக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்ட புதிய மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சனின் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்ட இந்த புதிய மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிரடியான அந்த வீடியோ இதோ…