இந்திய திரை உலகமே எதிர்பார்க்கும் ஒரு தமிழ் திரைப்படமாக உயர்ந்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகச்சிறந்த வரலாற்றுப் புனைவு நாவல்களுள் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் தனது கனவு படைப்பாக உருவாக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. எழுத்தாளர் ஜெயமோகன் இளங்கோ குமரவேல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் திரைக்கதையில் இதுவரை சாத்தியப்படாத பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக சாத்தியப்படுத்தி இருக்கின்றனர்.
ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக் குழுவினர் முழு வீச்சில் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பயணங்கள் தற்போது நிறைவடைடைந்தது. இப்படி ஒன்றாக பயணித்ததில் நாங்கள் மிகுந்த மிகுந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியோடும் இருந்தோம் ஆனால் இது இவ்வளவு எமோஷனலாகவும் மாறும் என நினைக்கவில்லை…" எனக் குறிப்பிட்டு இந்த பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் பயணத்தின் வீடியோ ஒன்றை கார்த்தி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…