இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!

சதீஷின் வித்தைக்காரன் பட டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியீடு,sathish in vithaikkaaran movie motion poster out now | Galatta

தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழ்கிறார். தளபதி விஜயின் திரைப்பயணத்தில் 67-வது திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் காஷ்மீரில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜயின் திரைப்படத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் வெங்கி, தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக திகழும் நடிகர் சதீஷ் கடந்த ஆண்டில்(2022) நாய் சேகர் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனது நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சீரியசான கதாபாத்திரத்தில் ஹீரோவாக சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்து வரும் சதீஷ், தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர் வெங்கி இயக்கும் முதல் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

வொய்ட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 3வது படைப்பாக பிளாக் காமெடி திரைப்படமாக தயாராகும் இப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து அறிமுக நடிகை சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், ரமேஷ் திலக், ஜான்விஜய், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவா கார்த்திக் ஒளிப்பதிவில் அருள் E சித்தார்த் படத்தொகுப்பு செய்யும் இந்த புதிய படத்திற்கு VBR இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். சதீஷ் கதாநாயகனாக நடிக்க பக்கா பிளாக் காமெடி திரைப்படமாக ரசிகர்களை மகிழ்விக்க வரும் இத்திரைப்படத்திற்கு வித்தைக்காரன் THE G.O.A.T என பெயரிடப்பட்டுள்ளது. அசத்தலான வித்தைக்காரன் பட மோஷன் போஸ்டர் இதோ…

இரவு 11 மணிக்கு போன் வரும்!- பொன்னியின் செல்வனில் ARரஹ்மான் உடனான அனுபவங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! வீடியோ இதோ
சினிமா

இரவு 11 மணிக்கு போன் வரும்!- பொன்னியின் செல்வனில் ARரஹ்மான் உடனான அனுபவங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! வீடியோ இதோ

காஜல் அகர்வாலின் செல்ல மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!
சினிமா

காஜல் அகர்வாலின் செல்ல மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!

பொன்னியின் செல்வன் - RRR படங்களின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தரமான விளக்கமளித்த ஸ்ரீகர் பிரசாத்! வைரல் வீடியோ
சினிமா

பொன்னியின் செல்வன் - RRR படங்களின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தரமான விளக்கமளித்த ஸ்ரீகர் பிரசாத்! வைரல் வீடியோ