விஷால் - SJசூர்யாவின் TIME TRAVEL கேங்ஸ்டர் படம்… பக்கா மாஸாக வந்த மார்க் ஆண்டனி பட அதிரடியான டீசர் இதோ!

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட டீசர்,vishal sj suriya in mark antony movie teaser out now | Galatta

அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லத்தி. காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்த லத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தனது திரைப்பயணத்தின் 34 ஆவது திரைப்படமாக தயாராகும் புதிய விஷால் 34 படத்தில் இயக்குனர் ஹரியுடன், விஷால் கைகோர்த்துள்ளார். முன்னதாக தாமிரபரணி & பூஜை என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஷால் - இயக்குனர் ஹரி கூட்டணியில் ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் இந்த திரைப்படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் விரைவில் லண்டனில் தொடங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். 

இதனிடையே விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தினேஷ் மாஸ்டர் பாபா பாஸ்கர் மாஸ்டர் மற்றும் அசார் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பீட்டர் ஹெயன் திலீப் சுப்பராயன் கனல் கண்ணன் மற்றும் தினேஷ் சுப்புராயன் என நான்கு ஸ்டன்ட் இயக்குனர்கள் பணியாற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் எஸ்.ஜே.சூர்யா வின் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. மாஸ் கேங்ஸ்டர் திரைப்படத்தில் டைம் ட்ராவலை மையப்படுத்தி அட்டகாசமான என்டர்டெய்னிங் திரைப்படமாக வர இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் விஷால் இரட்டை வேடங்களில் நடுத்திருப்பதும் பலவிதமான கெட்டப்புகளில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பதும் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இந்த நிலையில் பக்கா மாஸாக வந்த மார்க்க ஆண்டனி திரைப்படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அட்டகாசமான அந்த டீசர் இதோ…
 

இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!
சினிமா

இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் அனுமதியின்றி நடக்கிறதா?- சர்ச்சைக்குரிய படப்பிடிப்பு பற்றி அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்!
சினிமா

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் அனுமதியின்றி நடக்கிறதா?- சர்ச்சைக்குரிய படப்பிடிப்பு பற்றி அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்!

தளபதி விஜயின் யோஹன் - 5 முறை F1ரேஸ் சாம்பியன் அஜித் குமார்... கவனம் ஈர்க்கும் ஜீவி பிரகாஷின் புது பட கலக்கலான டீசர் இதோ!
சினிமா

தளபதி விஜயின் யோஹன் - 5 முறை F1ரேஸ் சாம்பியன் அஜித் குமார்... கவனம் ஈர்க்கும் ஜீவி பிரகாஷின் புது பட கலக்கலான டீசர் இதோ!