மலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.

Tovino Thomas Lidiya Blessed With A Baby Boy

கடந்த 2014-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான லிடியாவை திருமணம் செய்து கொண்டார். நான்கு வயதில் இஸ்ஸா எனும் மகள் உள்ளார். தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக தகவல் தெரியவந்தது. 

Tovino Thomas Lidiya Blessed With A Baby Boy

இதுகுறித்து டொவினோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஆண் குழந்தை பிறந்துள்ளது என பதிவு செய்திருந்தார். அவரது பதிவின் கீழ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். டொவினோ தாமஸ் நடிப்பில் மின்னல் வீரன் எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது.