திரையுலகம் பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து இன்று சாதனையாளராக மாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் திரை பயணம் பற்றிய பதிவு தான் இது. நாம் விரும்பும் நடிகர்களை அவரது மூன்றாம் கண்(கேமரா) பார்வையின் மூலம் படம்பிடித்து விழிகளுக்கு விருந்தளிக்கும் பணியை செய்யும் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். 

DOP RaviVarman Completes 20 Years In Film Industry

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர்,  திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்.

DOP RaviVarman Completes 20 Years In Film Industry

மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுஷி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் மற்றும் பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியது அவரது திறமை மற்றும் விளக்கக்காட்சிக்கு சான்றாக விளங்குகிறது. 

DOP RaviVarman Completes 20 Years In Film Industry

இந்த 20 ஆண்டுகால திரையுலக வாழ்வில் சிறப்பான 32 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடனும், 35+ பிற படங்களிலும், 400 விளம்பரப்படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன் தயாரித்த ‘மாஸ்கோவின் காவேரி’ (2010) மூலம் அவர் தன்னை ஒரு எழுத்தாளர் – இயக்குனராகவும் அடையாளம் காட்டினார். இப்படத்தின் மூலமாக தான் நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

DOP RaviVarman Completes 20 Years In Film Industry

அவரது திறமைகளுக்கு 23 வது ஈஎம்ஈ சர்வதேச விருது, மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், ஐஃபா விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் பல அங்கீகாரங்கள் சான்றாக இருக்கின்றன. மனதில் பதியும்படி காட்சியமைப்புகளை ஒளிப்பதிவு செய்து விழிகளுக்கு விருந்தளிக்கும் இந்த கலைஞன் ரவி வர்மனின் பணியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.