விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கும் படம் மோகன்தாஸ். படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கவுள்ளார். படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vishnu Vishal Meets His Son After 75 Days

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தாண்டி சில செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சில இடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளியூர்களில் மாட்டிக்கொண்டவர்கள் குடும்பத்தை காண இயலாமல் அவதி படுகின்றனர். 

Vishnu Vishal Meets His Son After 75 Days

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், மகன் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 75 நாட்களுக்கு பின் தன் மகனை சந்தித்துள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்திலே தெரிகிறது அவரது மகிழ்ச்சியின் அளவு என்னவென்று. விஷ்ணு கைவசம் காடன், FIR போன்ற படங்கள் தயார் நிலையில் உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் சரியான நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.