ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபலமான நடிகர் ரோஹித் ராய். காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கிண்டலாகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த புகைப்படத்தோடு, கொரோனாவை அடக்குவோம். வேலைக்குச் செல்லும்போது கவனமாக இருங்கள். முகக்கவசம் அணிந்தும், ஒரு நாளைக்கு பல முறை கைகளைக் கழுவுங்கள். நாம் அனுமதிக்காத வரை இந்த வைரஸால் நம்மை நெருங்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

RohitRoy Gets Trolled For Rajini Corona Meme

அவரது இந்த பதிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நல்ல விஷயத்தை கூறும் போது ஏன் சம்பந்தமில்லாமல் ரஜினிகாந்தை கேலி செய்ய வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள ரோஹித் ராய், அமைதியாக இருங்கள் நண்பர்களே. இது ஒரு நகைச்சுவை மட்டுமே. இது எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. உங்களைச் சிரிக்கவைக்கவே அப்படிச் செய்தேன் என்று சமாளித்துள்ளார். 

RohitRoy Gets Trolled For Rajini Corona Meme

நடிகர் ரோஹித் ராய் அவர்ளுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யாரென்று தெரிந்திருக்கும். அவரை ரசிகர்கள் எந்த அளவு நேசிக்கின்றனர் என்பது புரிந்திருக்கும். அவரை வைத்து மீம்ஸ் போடுவது, ஜோக் அடிப்பதற்கு முன்னால், அவரது திரை அனுபவம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் நெட்டிசன்கள். ஐந்து தசாப்தாங்களாக ரசிகர்களை என்டர்டெயின் செய்து சூப்பர்ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்திற்கு தயாராகி வருகிறார். தலைவர் ஸ்டைலில் கூற வேண்டுமென்றால், இது சும்மா ட்ரைலர் தான் மா....