கடந்த 2015-ம் ஆண்டு வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆரி அர்ஜுனாவுடன் ஒரு படத்தில்  நடித்து வருகிறார். 

Pa Ranjith Releases Milir First Look Poster

இந்நிலையில் ஐஷ்வர்யா தத்தா நடித்துள்ள மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை நாகேந்திரன் இயக்கியுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

Pa Ranjith Releases Milir First Look Poster

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. தற்போது இருக்கும் தமிழ் சினிமாவில் ஷீரோ சப்ஜெக்ட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா இதுபோன்ற படங்களில் கவனம் செலுத்துவதாக திரை வட்டாரம் கூறுகிறது.