மகாநதி வெற்றிக்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அவர் கூடுதல் கவணம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பென்குயின் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 

KeerthySureshs Penguin Teaser To Release On June8

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.  

KeerthySureshs Penguin Teaser To Release On June8

இந்நிலையில் வருகின்ற ஜூன் 8-ம் தேதி இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. ஜூன் 19-ம் தேதி இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.