போடு விசில.. வெளியான ஒரே நாளில் மாஸ் காட்டும் ‘தி லெஜண்ட்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்.. மிரட்டலான அறிவிப்பு இதோ..

தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் முன்னிலை - Fans Celebrated The legend movie here is the massive announcement | Galatta

கடின உழைப்பை கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த அபிப்ராயத்தை பெற்ற பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், ஆரம்பத்தில் தனது 'லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்' நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து பல நிறுவனங்களுக்கு  முன்னுதாரணமாக திகழ்பவர். வெற்றியின் உச்சத்தை தொட்ட இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’ . மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவான இப்படத்தை தனது சொந்த செலவில் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்' சார்பில் தயாரித்து நடித்தார்.

இந்த படத்தை பிரபல இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கினார். அட்டகாசமான கதைகளத்தில் களம் இறங்கிய சரவணன் அவர்களுக்கு பல எதிர்மறை விமர்சனங்கள் துவக்கத்தில் எழுந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து லெஜன்ட் சரவணன் முன்னேறினார். முதல் படம் ரசிகர்களுக்கு பெரும்பாலும் பிடித்து போக திரைப்படம் மிகப் பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை லெஜன்ட் சரவணன் பெற்றார்.

இப்படத்தில் லெஜன்ட் சரவணன் அவர்களுடன் இணைந்து கீர்த்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரௌட்டெல்லா, சுமன், மேலும் நாசர்  இளைய திலகம் பிரபு, விஜயகுமார், லதா, சச்சு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, மயில்சாமி, முனீஸ் காந்த், சிங்கம் புலி, லிவிங்ஸ்டண், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தீபா சங்கர், பெசன்ட் ரவிபோன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கியது தி லெஜண்ட் திரைப்படம். மேலும் இப்படத்தில் குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.  மிக முக்கியமாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். மேலும் கவிபேரரசு வைரமுத்து படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த கூட்டணியில் உருவாகி பாடல்கள மற்றும் ஹாரிஸின் பின்னணி இசை பெரும் கவனம் பெற்றது. மேலும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  

2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஆண்டு ஜூலை 28 ல் வெளியான திலெஜண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் & ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளிவந்த அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளியானதில் இருந்து ஒடிடியில் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். நீண்ட நாளுக்கு பின் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த தி லெஜண்ட் திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்  ஆகிய மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் படத்தை வரவேற்றனர்.

இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியான ஒரே நாளில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் தி லெஜண்ட் திரைப்படம் பார்வையாளர்களின் வரவேற்பை கடந்துள்ளதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. இதனையடுத்து படத்தின் நடிகரும் தயாரிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் லெஜண்ட் சரவணன் பதிவினை பகிர்ந்தும் அவரை வாழ்த்தியும் வருகிறார்

எந்தவொரு செயலிலும் முழு மனதோடு தன்னம்பிக்கையோடு களம் இறங்கினால் வரவேற்பு பெற்று வெற்றி கிட்டும் என்பதை லெஜண்ட் சரவணன் அவர்கள் ஒவ்வொரு தருணத்திலும் நிருபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாடல் குறித்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகி வரும் அறிவிப்பு இதோ..
சினிமா

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாடல் குறித்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகி வரும் அறிவிப்பு இதோ..

சினிமா

"அவர் Underrated தான்” சாம் சி எஸ் குறித்து ஜெயம் ரவி கருத்து.. – அட்டகாசமான அகிலன் சிறப்பு நேர்காணல் இதோ..

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் - வைரலாகும் அறிவிப்பு இதோ..