தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இவற்றை தவிர பல புதிய தொடர்களும் தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய சீரியல் இணையவுள்ளது.இதற்கான அறிவிப்பு ப்ரோமோவை ஜீ தமிழ் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

தவமாய் தவமிருந்து என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த புதிய தொடரின் உருக்கமான ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த புது தொடரின் அறிவிப்பு ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.