விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.விகடன் டெலிவிஸ்டாஸ் விஜய் தொலைக்காட்சியுடன் முதல் முறையாக இந்த தொடருக்காக இணைந்துள்ளனர்.விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து வரும் இந்த தொடரை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.

இந்த தொடரில் பிரபல நடிகரும் தொகுப்பாளருமான தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் தெய்வமகள் தொடரில் அண்ணியாக நடித்து புகழ் பெற்ற ரேகா,மீரா கிருஷ்ணன்,நவீன் வெற்றி,தர்ஷனா,யோகி என பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தி வருகின்றனர்.

எதார்த்தனமான வித்தியாசமான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடர் ரசிகர்களின் ஆதரவை பெற்று விட்டது.தற்போது இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகை ஒருவர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரில் நடித்து வந்த லாவண்யா சில காரணங்களால் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவருக்கு பதிலாக தற்போது இந்த தொடரில் பிரபல சீரியல் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதாஸ் இந்த தொடரில் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.