விஷால் - SJசூர்யாவின் பிளாக்பஸ்டர் மார்க் ஆண்டனி படக்குழு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் கலக்கலான GLIMPSE இதோ!

விஷால் சூர்யாவின் மார்க் ஆண்டனி பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு,vishal sj suryah in mark antony movie special glimpse out now | Galatta

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பற்றி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் மார்க் ஆண்டனி  திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக VIBE OF மார்க் ஆண்டனி எனும் ஸ்பெஷல் வீடியோ வெளியானது. விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கூடுதல் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக கொடி கட்டி பறந்த சில்க் ஸ்மிதா இருக்கிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உருவம் கொண்ட நடிகை விஷ்ணு ப்ரியாவை நடிக்கவைத்து CGI உதவியுடன் பட குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர். 

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. அட்டகாசமான இரட்டை வேடங்களில் விஷால் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்சன் என கம்ப்ளீட் பேக்கேஜாக மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து பெரும் கவனத்தை ஈர்த்த இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரிலீசுக்கு பிறகு அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

தொடர்ந்து ரசிகர்கள் ரிப்பீட் மோடில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியையும் படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்திலிருந்து ஸ்பெஷல் ட்ரீட்டாக புதிய வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் அனைவரையும் கவர்ந்த பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலின் பின்னணியில் VIBE OF மார்க் ஆண்டனி என்னும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளி வந்திருக்கும் VIBE OF மார்க் ஆண்டனி வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.